/
உள்ளூர் செய்திகள்
/
நீலகிரி
/
காட்டெருமை அருகில் செல்லும் சுற்றுலா பயணிகள் : விழிப்புணர்வு ஏற்படுத்துவது அவசியம்

ADDED : டிச 04, 2025 06:34 AM

குன்னுார்: குன்னுார் சாலையோர தேயிலை தோட்டங்களில் முகாமிடும் காட்டெருமைகள் அருகில் நின்று சுற்றுலா பயணிகள் புகைப்படம் எடுப்பது அதிகரித்து வருகிறது.
நீலகிரி மாவட்டத்தில் வனப்பகுதியில் உள்ள காட்டெருமைகள் சமீப காலமாக உணவு தேடி குடியிருப்பு பகுதிகளுக்கு படை எடுப்பதுடன், தேயிலை தோட்டங்களிலும் முகாமிடுகின்றன. சுற்றுலா மையங்களில் உள்ள பகுதிகளுக்கு செல்லும் சாலையோர தேயிலை தோட்டங்களில் காட்டெருமைகளின் நடமாட்டம் அதிகமாக உள்ள நிலையில் இந்த பகுதிகளுக்கு வரும் சுற்றுலாப்பயணிகள் ஆபத்தை உணராமல், அருகிலேயே நின்று, புகைப்படம் செல்பி எடுக்கின்றனர். குறிப்பாக குழந்தைகளுடன் வரும் பயணிகள் பயமின்றி அருகில் செல்கின்றனர். தோட்டங்களில் இருக்கும் காட்டெருமைகள் திடீரென ஓட்டம் பிடிக்கும் போது, சுற்றுலா பயணிகளை தாக்கும் அபாயம் உள்ளது.
டால்பின் நோஸ் பகுதியில் சீரமைப்பு பணிகள் நடந்து வரும் நிலையில் காட்சி முனைக்கு மட்டும் சுற்றுலா பயணிகளுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. எனினும், சுற்றுப்புற பகுதிகளில் வந்து இயற்கை காட்சிகளை ரசித்து செல்லும் பயணிகள் அருகில் உள்ள தேயிலை தோட்டங்களில் முகாமிடும் காட்டெருமைகள் அருகில் நின்று செல்பி, புகைப்படம் எடுக்கின்றனர். இதனை தடுக்கும் வகையில் வனத்துறையினர் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.