/
உள்ளூர் செய்திகள்
/
நீலகிரி
/
சாரல் மழையில் சுற்றுலா பயணியர் குதுாகலம்
/
சாரல் மழையில் சுற்றுலா பயணியர் குதுாகலம்
ADDED : மே 24, 2025 09:44 PM

குன்னூர் : நீலகிரி மாவட்டம், குன்னூர் சிம்ஸ் பூங்காவில், 65வது பழ கண்காட்சி நேற்று முன்தினம், துவங்கியது. 3.8 டன் பழங்களில், 'ஹாலிடே பிக்னிக்' பெயரில், பழமையான கார், கேக், ஐஸ்கிரீம், எலுமிச்சை, தொப்பி விசில், பழக் கூடைபந்து, இளநீர் உள்ளிட்ட பல்வேறு வடிவமைப்புகள் காட்சிப்படுத்தப்பட்டுள்ளன.
தோட்டக்கலைத்துறை அரங்குகளில், வனவிலங்குகள், பறவையினங்கள் பழங்களால் வடிவமைக்கப்பட்டுள்ளன. ஊட்டி மற்றும் சுற்றுப்புற பகுதிகளில் மழை நீடித்த போதும், குன்னூரில் இதமான கால நிலையை அனுபவிக்கும் சுற்றுலா பயணியர் குடைகள் பிடித்தும், சாரல் மழையில் நனைந்தும் பூங்காவில் குதூகலத்துடன் வலம் வந்தனர்.
ஊட்டி அரசு தாவரவியில் பூங்காவுக்கு சுற்றுலா பயணியர் ரெயின் கோட், குடை பிடித்துக்கொண்டு பலரும் வெம்மை ஆடைகளை அணிந்து வந்தனர். ஊட்டி படகு இல்லத்தில் மழை அதிகரித்ததால் மிதி படகு சவாரி நிறுத்தப்பட்டது.