தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/நீலகிரி/‘குளிரிலும் சுற்றுலா பயணியர் குதூகலம்’

‘குளிரிலும் சுற்றுலா பயணியர் குதூகலம்’

‘குளிரிலும் சுற்றுலா பயணியர் குதூகலம்’


UPDATED : நவ 22, 2026 03:48 PM

ADDED : நவ 22, 2026 03:46 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : நவ 22, 2026 03:48 PM ADDED : நவ 22, 2026 03:46 PM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

ஊட்டி: ஊட்டியில், குவிந்த சுற்றுலா பயணியர் குளிரிலும் குதூகலத்துடன், இயற்கை காட்சிகளை கண்டுக்களித்தனர்.

நீலகிரி மாவட்டம் ஊட்டிக்கு, சீசன் நாட்களில், 25 லட்சத்திற்கு மேற்பட்ட சுற்றுலாப் பயணிகளும், வார விடுமுறை நாட்களில், 5 ஆயிரத்திற்கு குறையாமல், சுற்றுலாப் பயணிகளின் வருகை இருந்து வருகிறது.

வட கிழக்கு பருவ மழை ஓய்ந்த நிலையில், தற்போது, உறைப்பனி பொழிவு ஏற்பட்டுள்ளது. பகல் நேரத்தில் வெயிலும், காலை மற்றும் மாலை நேரங்களில், பனிப்பொழிவும் இருப்பதால், கடும் குளிர் நிலவுகிறது.

இந்த குளிரை பொருட்படுத்தாமல், சுற்றுலா பயணிகள், அரசு தாவரவியல் பூங்கா, ரோஜா பூங்கா மற்றும் படகு இல்லம் உள்ளிட்ட சுற்றுலா மையங்களை ரசிக்க வருகின்றனர்.

பருவமழையின் போது, குன்னூர் சாலை துண்டிக்கப்பட்ட நிலையில், மேட்டுப்பாளையம் உள்ளிட்ட சமவெளி பகுதியில் இருந்து, கோத்தகிரி வழியாக வரும் சுற்றுலா பயணிகள், காலை நேரத்தில், குளிரிலும், தொட்டபெட்டா சிகரத்தின் அழகை முதலில், குதூகலத்துடன் கண்டு களித்து, பிற சுற்றுலா மையங்களுக்கு செல்கின்றனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us