/
உள்ளூர் செய்திகள்
/
நீலகிரி
/
சாலையில் கால்நடை உலா :சுற்றுலா பயணிகள் அவதி
/
சாலையில் கால்நடை உலா :சுற்றுலா பயணிகள் அவதி
ADDED : ஜன 20, 2024 02:09 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ஊட்டி;ஊட்டி தாவரவியல் பூங்கா சாலையில், பகல் நேரங்களில் உலாவரும் கால்நடைகளால் சுற்றுலா வாகனங்களை இயக்குவதில் சிரமம் ஏற்படுகிறது.
ஊட்டி தாவரவியல் பூங்காவுக்கு வார இறுதி நாட்களில் பல்லாயிரம் சுற்றுலா வாகனங்கள் வருகின்றன. இந்நிலையில் பூங்காவுக்கு செல்லும் முக்கிய சாலையில் பகல் நேரங்களில் கூட, மாடு, குதிரை உட்பட கால்நடைகள் அதிகளவில் உலா வருவதால், பயணிகள் வாகனங்களை இயக்குவதில் சிக்கல் ஏற்படுகிறது. நகராட்சி நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.