தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/நீலகிரி/ யானை ஆக்ரோஷத்தை உணராத சுற்றுலா பயணியர்

 யானை ஆக்ரோஷத்தை உணராத சுற்றுலா பயணியர்

 யானை ஆக்ரோஷத்தை உணராத சுற்றுலா பயணியர்


ADDED : பிப் 02, 2026 05:01 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : பிப் 02, 2026 05:01 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

கூடலூர்: முதுமலையில், சாலையை கடக்கும் காட்டு யானைகள், இடையூறு ஏற்படுத்தும் வாகனங்களால், அச்சத்துடன் சாலையை கடந்து செல்லும் நிலை ஏற்பட்டுள்ளது.

நீலகிரி மாவட்டம், முதுமலை புலிகள் காப்பகத்தில், கோடை மழை பொழிவு இல்லாததால், வறட்சியின் தாக்கம் அதிகரித்து வருகிறது. வனவிலங்குகளுக்கு உணவு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. காட்டு யானைகள், உணவு தேடி மாயாறு ஆற்றை ஒட்டிய வனப்பகுதிக்கு இடம் பெயர்ந்து வருகிறது.

இவைகள், மைசூரு தேசிய நெடுஞ்சாலை ஓரங்களில் மேய்ச்சலில் ஈடுபடுவதுடன், அடிக்கடி சாலையை கடந்து செல்கிறது. இவ்வழியாக பயணிக்கும் சுற்றுலாப் பயணிகள், வனவிலங்குகள் அருகே, வாகனங்களை நிறுத்தி இடையூறு ஏற்படுத்தக் கூடாது. என, வலியுறுத்தி வருகின்றனர்.

இந்நிலையில், முதுமலை பாம்பஸ் பகுதியில், குட்டியுடன் சாலையை கடக்க காத்திருந்த காட்டு யானைகள் அருகே, சுற்றுலா பயணிகள் வாகனங்களை நிறுத்தி, இடையூறு ஏற்படுத்தினர். சிலர் கீழே இறங்கி அருகே சென்று படம் எடுக்க முயன்றனர்.

கூட்டத்திலிருந்து, யானை திடீரென ஆக்ரோஷமாக வாகனங்களை நோக்கி வந்தது. சிலர் அச்சத்துடன் அங்கிருந்து சென்றுவிட, சிலர் தொடர்ந்து வாகனங்களை நிறுத்தி இடையூறு ஏற்படுத்தினர்.

சாலையை கடக்க முடியாமல் தவித்த யானைகள், திடீரென குட்டியுடன் வாகனங்களுக்கிடையே ஆக்ரோஷமாக சாலையை கடந்து சென்றது. அடிக்கடி நடைபெறும், இது போன்ற சம்பங்களால் காட்டு யானைகள் சுற்றுலா வாகனங்களை தாக்கும் ஆபத்தும் உள்ளது. எனவே, வனத்துறையினர் தேசிய நெடுஞ்சாலையில் கண்காணிப்பு பணியை மேலும் தீவிர படுத்த வனவிலங்கு ஆர்வலர்கள் வலியுறுத்தி உள்ளனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us