/
உள்ளூர் செய்திகள்
/
நீலகிரி
/
தண்ணீர் ஏற்றி வந்த டிராக்டர்; கட்டுப்பாட்டை இழந்து விபத்து
/
தண்ணீர் ஏற்றி வந்த டிராக்டர்; கட்டுப்பாட்டை இழந்து விபத்து
தண்ணீர் ஏற்றி வந்த டிராக்டர்; கட்டுப்பாட்டை இழந்து விபத்து
தண்ணீர் ஏற்றி வந்த டிராக்டர்; கட்டுப்பாட்டை இழந்து விபத்து
ADDED : ஆக 11, 2025 08:34 PM

கூடலுார்; கூடலுார், கோழிப்பாலம் அருகே, தண்ணீர் ஏற்றி வந்த டிராக்டர் கட்டுப்பாட்டை இழந்து வீட்டின் மீது மோதி கவிழ்ந்தது.
கூடலுார் கோழிப்பாலம் பகுதியில், அரசு கல்லுாரியை ஒட்டி, அரசு மாணவ, மாணவியர் விடுதிகள் கட்டும் பணிகள் நடந்து வருகிறது.
இப்பணிக்கு தேவையான தண்ணீரை, இரும்புபாலம் ஆற்றில் இருந்து, டிராக்டரில் எடுத்து வந்து பயன்படுத்தி வருகின்றனர். அதன்படி, நேற்று முன்தினம் காலை, 8:00 மணிக்கு டிராக்டர் டாங்கில் தண்ணீர் நிரப்பி, எடுத்து வந்தனர்.
டிராக்டர் அப்பகுதி குடியிருப்பு வழியாக சிமென்ட் சாலையில் சென்று கொண்டிருந்தபோது, கட்டுப்பாடு இழந்து திடீரென கவிழந்தது. அதில், குணரத்தினம் என்பவர் வீட்டின் ஒரு பகுதி, சேதமடைந்தது. அதிர்ஷ்டவசமாக யாருக்கும் எந்த பாதிப்புமும் ஏற்படவில்லை. தொடர்ந்து, பொக்லைன் இயந்திரத்தை பயன்படுத்தி டிராக்டர் மீட்கப்பட்டது. அப்பகுதியில் அதிகாரிகள் ஆய்வு செய்தனர்.