/
உள்ளூர் செய்திகள்
/
நீலகிரி
/
பதிவெண் இல்லாமல் இயக்கப்படும் டிராக்டர்
/
பதிவெண் இல்லாமல் இயக்கப்படும் டிராக்டர்
ADDED : ஏப் 11, 2025 09:52 PM

பந்தலுார், ; நெல்லியாளம் நகராட்சியில், 'நம்பர் பிளேட்' இல்லாமல் இயக்கப்படும் டிராக்டர் குறித்து, போலீசார் மற்றும் போக்குவரத்துறை அதிகாரிகள் கண்டு கொள்ளாமல் இருப்பது அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது.
நெல்லியாளம் நகராட்சியில், ஒப்பந்த அடிப்படையில் பணியாளர்கள் துாய்மை பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த பணிக்காக நகராட்சி மூன்று -குப்பை லாரிகள், ஒரு -டிப்பர் சம்பந்தப்பட்ட ஒப்பந்ததாரருக்கு வழங்கப்பட்டுள்ளது. மேலும், ஒப்பந்ததாரர் மூலம் ஒரு டிராக்டரும் இயக்கப்பட்டு வருகிறது.
இந்த டிராக்டர் பதிவு எண் இல்லாமல் இயக்கப்பட்டு வருகிறது. பதிவு இல்லாத வாகனங்களை பறிமுதல் செய்து, வழக்கு பதிவு செய்ய வேண்டிய போலீசார் மற்றும் வட்டார போக்குவரத்து துறை அதிகாரிகள், இதனை கண்டு கொள்ளாமல் விட்டுள்ளனர். இதனால், உள்ளூர் மக்கள் கடும் அதிருப்தி அடைந்துள்ளனர். எனவே, நகராட்சி அதிகாரிகள் ஆய்வு செய்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

