தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/நீலகிரி/ வியாபாரிகள் சங்கம் போலீசில் புகார்

 வியாபாரிகள் சங்கம் போலீசில் புகார்

 வியாபாரிகள் சங்கம் போலீசில் புகார்


ADDED : ஏப் 27, 2026 05:30 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஏப் 27, 2026 05:30 PM


Follow on Google
அ நிறம் | அளவு

கோத்தகிரி: கோத்தகிரி அரவேனு பஜாரில், நடுரோட்டில் தகராறில் ஈடுபடும் இளைஞர்கள் மீது, நடவடிக்கை எடுக்க வேண்டும் என, போலீசில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.

அரவேனு பஜார் பகுதியில், 70க்கும் மேற்பட்ட வியாபாரிகள் கடை நடத்தி வருகின்றனர். இங்கு, மாலை நேரங்களில் சில குறிப்பிட்ட இளைஞர்கள், மது அருந்திவிட்டு நடுரோட்டில் நின்று, வழி மறிப்பதுடன், பாட்டில்களை சாலையில் உடைப்பது, சத்தமாக தகாத வார்த்தையால் திட்டி, கற்களை வீசுவது போன்ற செயல்களில் ஈடுபட்டு வருகின்றனர்.

இதனால், வியாபாரிகள் மற்றும் பெண்கள் அச்சம் அடைந்துள்ளனர். இவர்களால், மக்கள் சாலையில் நடமாடக்கூட முடியாத சூழல் ஏற்பட்டுள்ளது. எதிர்த்து கேட்பவர்கள் அந்த கும்பலால் தாக்கப்படுகின்றனர்.

எனவே, அவர்களை அடையாளம் கண்டு நடவடிக்கை எடுக்க வேண்டும் என, வியாபாரிகள் சங்க தலைவர் நடேசன், செயலாளர் மனோகரன் மற்றும் பொருளாளர் மிலாப் சந்த் ஆகியோர், கோத்திகிரி போலீஸ் ஸ்டேஷனில் புகார் அளித்துள்ளனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us