/
உள்ளூர் செய்திகள்
/
நீலகிரி
/
குன்னுார் நகராட்சி அலுவலகத்தை முற்றுகையிட்ட வியாபாரிகள்
/
குன்னுார் நகராட்சி அலுவலகத்தை முற்றுகையிட்ட வியாபாரிகள்
குன்னுார் நகராட்சி அலுவலகத்தை முற்றுகையிட்ட வியாபாரிகள்
குன்னுார் நகராட்சி அலுவலகத்தை முற்றுகையிட்ட வியாபாரிகள்
ADDED : பிப் 16, 2024 12:35 AM

குன்னுார்:குன்னுாரில், தரக்குறைவாக பேசிய கமிஷனரை கண்டித்து வியாபாரிகள் நகராட்சி அலுவலகத்தை முற்றுகையிட்டனர்.
'குன்னுார் நகராட்சி கட்டுப்பாட்டில் உள்ள மார்க்கெட் கடைகளுக்கு வாடகை நிலுவை தொகையை உடனடியாக செலுத்த வேண்டும்,' என, கடந்த 2 நாட்களாக, புதிய கமிஷனர் பர்ஜானா, அதிகாரிகளுடன் சென்று கடையில் அமர்ந்து வசூல் செய்து வருகிறார். 18 லட்சம் ரூபாய் வரை பாக்கி வைத்துள்ள வியாபாரிகள் சங்க கட்டடத்தை விட்டு, மற்ற, 4 கடைகளுக்கு 'சீல்' வைத்தார்.
இந்நிலையில், வியாபாரிகளை தரக்குறைவாக கமிஷனர் பேசியதாக கூறி, மார்க்கெட் வியாபாரிகள் பலர் நகராட்சி அலுவலகத்தை முற்றுகையிட்டனர். கமிஷனர் அங்கு இல்லாத நிலையில், நகராட்சி துணை தலைவர் வாசிம் ராஜா வியாபாரிகளிடம் பேச்சு வார்த்தை நடத்தினார்.
அப்போது, 'கடை வாடகை செலுத்த கால அவகாசம் பெற்று தந்து உரிய தீர்வு காணப்படும்,' என, உறுதி அளித்ததால் வியாபாரிகள் கலைந்து சென்றனர்.