/
உள்ளூர் செய்திகள்
/
நீலகிரி
/
பேரக்ஸ் பகுதியில் 'பார்க்கிங்' கட்டணம் வசூல் புகார் வாரிய அதிகாரியிடம் முறையிட்ட வியாபாரிகள்
/
பேரக்ஸ் பகுதியில் 'பார்க்கிங்' கட்டணம் வசூல் புகார் வாரிய அதிகாரியிடம் முறையிட்ட வியாபாரிகள்
பேரக்ஸ் பகுதியில் 'பார்க்கிங்' கட்டணம் வசூல் புகார் வாரிய அதிகாரியிடம் முறையிட்ட வியாபாரிகள்
பேரக்ஸ் பகுதியில் 'பார்க்கிங்' கட்டணம் வசூல் புகார் வாரிய அதிகாரியிடம் முறையிட்ட வியாபாரிகள்
ADDED : ஜன 22, 2025 11:13 PM

குன்னுார்,; குன்னுார் பேரக்ஸ் ராணுவ பகுதியில் நிறுத்தும் வாகனங்களுக்கு, கன்டோன்மென்ட் நிர்வாகத்தின் உத்தரவை மீறி, 'பார்க்கிங்' கட்டணம் வசூலிப்பதாக வியாபாரிகள் புகார் தெரிவித்துள்ளனர்.
குன்னுார் வெலிங்டன் பேரக்ஸ் ராணுவ மையபகுதியில் உள்ள கடைகள், கன்டோன்மென்ட் சார்பில் வியாபாரிகளுக்கு டெண்டர் விடப்பட்டு வாடகை வசூலிக்கப்படுகிறது. இங்கு, ராணுவ குடும்பத்தினர், வாகனங்களை நிறுத்தி பொருட்களை வாங்கி செல்கின்றனர்.
இந்நிலையில், கடந்த, ஒன்றாம் தேதியில் இருந்து, இங்கு நிறுத்தும் வாகனங்களுக்கு பார்க்கிங் கட்டணம் வசூலிக்கவும், கன்டோன்மென்ட் வாரியம், டெண்டர் விட்டது.
இரண்டு சக்கர வாகனங்களுக்க, ஒரு மணி நேரத்திற்கு, 5 ரூபாய்; கார் உட்பட நான்கு சக்கர வாகனங்களுக்கு, 20 ரூபாய் நிர்ணயிக்கப்பட்டது.
அதில், 'டீக்கடை, உணவகம், ஜெராக்ஸ் கடை, மளிகை பொருட்கள் வாங்க வருபவர்கள், மூத்த குடிமக்கள், மாற்று திறனாளிகள் வாகனங்களை நிறுத்த, கட்டணத்தில் மறு பரிசீலனை செய்ய வேண்டும்,' என, ஏற்கனவே வாரியத்திடம், வியாபாரிகள் மனு அளித்துள்ளனர்.
கோரிக்கை ஏற்று, 'கடைகளுக்கு வந்து செல்லும் வாகனங்கள் மற்றும் ஆட்டோக்களுக்கு கட்டண தளர்வு அளிக்கப்படும்,' என, உறுதி அளிக்கப்பட்டது.
இந்நிலையில், டெண்டர் எடுத்த நபர்கள், இதனை ஏற்காமல் அனைத்து வாகனங்களுக்கும் கட்டணம் வசூலித்தனர்.
இதற்கு எதிர்ப்பு தெரிவித்து நேற்று மீண்டும் வியாபாரிகள், டிரைவர்கள், அனைத்து கட்சியினர், வாரிய முதன்மை நிர்வாக அதிகாரி வினோத் லோட்டேயை சந்தித்து புகார் தெரிவித்தனர்.
வியாபாரிகள் கூறுகையில், 'இங்கு ராணுவ அதிகாரியின் குடும்பத்தினர் வாகனத்தை நிறுத்தி பொருட்களை வாங்க வந்த போது, 'போட்டோ' எடுத்து டெண்டர் எடுத்தவர்கள் மிரட்டினர். வியாபாரமும் குறைந்து வருகிறது. தீர்வு கிடைக்காவிட்டால், போராட்டம் நடத்த அனைத்து கட்சியினர் முடிவு செய்துள்ளனர்,' என்றனர்.
வாரிய முன்னாள் துணை தலைவர் வினோத் குமார் கூறுகையில்,''ராணுவத்தினர் மற்றும் கன்டோன்மென்ட் வாகனங்களுக்கும் கட்டணம் வசூலிப்பதாக வாரியத்திடம் தெரிவிக்கப்பட்டுள்ளது; சுற்றுலா வாகனங்களுக்கான கட்டணம் குறித்து போர்டு கூட்டத்தில் முடிவு செய்யப்படுவதாக அதிகாரி உறுதி அளித்துள்ளார்,'' என்றார்.