/
உள்ளூர் செய்திகள்
/
நீலகிரி
/
'பழமையான கட்டடங்களை பாதுகாக்க வேண்டும்' : கூட்டத்தில் வியாபாரிகள் கருத்து
/
'பழமையான கட்டடங்களை பாதுகாக்க வேண்டும்' : கூட்டத்தில் வியாபாரிகள் கருத்து
'பழமையான கட்டடங்களை பாதுகாக்க வேண்டும்' : கூட்டத்தில் வியாபாரிகள் கருத்து
'பழமையான கட்டடங்களை பாதுகாக்க வேண்டும்' : கூட்டத்தில் வியாபாரிகள் கருத்து
ADDED : ஜூலை 14, 2025 08:49 PM

குன்னுார்; ''குன்னுாரில் நுாற்றாண்டுகள் கடந்த பழமை வாய்ந்த மார்க்கெட் கட்டடங்களை பாதுகாப்பதுடன், மார்க்கெட் கடைகளை இடித்து கட்ட கால அவகாசம் அளிக்க வேண்டும்,' என, வியாபாரிகள் வலியுறுத்தியுள்ளனர்.
குன்னுார் மார்க்கெட் கடைகளை இடித்து, 41.50 கோடி ரூபாய் மதிப்பில், 'பார்க்கிங்' வசதியுடன் புதிய கட்டடங்கள் கட்ட பூமி பூஜை போடப்பட்டது. உழவர் சந்தை பகுதியில் கடைகள் அமைக்கப்பட்ட போது, நடைமுறை சிக்கல்கள் உள்ளதால், மார்க்கெட் அருகே கடைகளை அமைக்க வியாபாரிகள் கவுன்சிலர்கள் வலியுறுத்தினர்.
இந்நிலையில், கடந்த மாத இறுதியில், 15 நாட்களில் காலி செய்ய முதற்கட்டமாக, 324 கடைகளுக்கு நோட்டீஸ் வழங்கப்பட்டது. கடையடைப்பு நடத்தப்பட்டது.
அ.தி.மு.க., பொது செயலர் பழனிசாமி; மத்திய இணை அமைச்சர் முருகன் ஆகியோர் கடை காலி செய்வதை அரசு கைவிட வலியுறுத்தினர். சில வியாபாரிகள் உயர் நீதிமன்றத்தை அணுகி உரிய கால அவகாசம் கேட்டு வழக்கு தொடுத்துள்ளனர்.
தொடர்ந்து, 'வியாபாரிகளின் கருத்துக்கள் கேட்டு, 21ம் தேதி நடக்கும் மறு விசாரணையின் போது தாக்கல் செய்ய வேண்டும்,' என, நீதிமன்ற உத்தரவிட்டுள்ளது. இந்நிலையில், குன்னுார் நகராட்சி அலுவலக அரங்கில் நேற்று, கமிஷனர் இளம்பரிதி தலைமையில் கருத்து கேட்பு கூட்டம் நடத்தி, வியாபாரிகளின் கருத்துக்கள் பதிவு செய்யப்பட்டது.
குன்னுார் வியாபாரிகள் கூறுகையில், 'உழவர் சந்தை பகுதியில், மழை காலங்களில் நிலச்சரிவு ஏற்பட்டுள்ளதுடன் வனவிலங்குகள் வந்து செல்வதால் பாதுகாப்பான சூழல் இல்லை. சிறிய குறுகலான சாலையில் போக்குவரத்து பாதிப்பு ஏற்படும்.
அருகில் உள்ள இடங்களில் தற்காலிக கடைகள் அமைத்து தர வேண்டும். 1841க்கு பிறகு இங்கு தினசரி சந்தை கடைகள், தற்போதும் திடமாக உள்ளது. உச்ச நீதிமன்றம் உத்தரவுப்படி பாரம்பரிய கட்டடங்களை பாதுகாக்க வேண்டும். 1.25 கோடி ரூபாய் வருவாய் கிடைத்து வந்த நிலையில், தற்போது, 6 கோடி ரூபாய் வரை நகராட்சிக்கு வருமானம் கிடைக்கிறது. பல லட்சங்கள் கடன் வாங்கி வாடகை செலுத்திய நிலையில் ஓராண்டிற்கு கால அவகாசம் வழங்க வேண்டும்,' என்றனர்.