/
உள்ளூர் செய்திகள்
/
நீலகிரி
/
பழங்குடியின மக்களின் பாரம்பரிய திருவிழா; நேர்த்தி கடன் செலுத்திய மக்கள்
/
பழங்குடியின மக்களின் பாரம்பரிய திருவிழா; நேர்த்தி கடன் செலுத்திய மக்கள்
பழங்குடியின மக்களின் பாரம்பரிய திருவிழா; நேர்த்தி கடன் செலுத்திய மக்கள்
பழங்குடியின மக்களின் பாரம்பரிய திருவிழா; நேர்த்தி கடன் செலுத்திய மக்கள்
ADDED : மார் 26, 2025 08:49 PM

பந்தலுார்; கூடலுார் மற்றும் பந்தலுார் சுற்று வட்டார பகுதிகளில் குரும்பர், பணியர், காட்டுநாயக்கர் சமுதாய பழங்குடியின மக்கள் வாழ்ந்து வருகின்றனர்.
இவர்கள் பாரம்பரியமாக வன தேவதைகள் மற்றும் தங்கள் குலதெய்வங்களான மாரியம்மன், குளியன், முத்தப்பன் ஆகிய தெய்வங்களை வழிபட்டு வருகின்றனர். அதில், பந்தலுார் அருகே பாட்டவயல் முக்குபாடி பழங்குடியினர் கிராமத்தில் அமைந்துள்ள ஸ்ரீ மாரியம்மன் கோவில் விளக்கு திருவிழா கடந்த, 24ம் தேதி காலை பூஜை, கொடியேற்றத்துடன் துவங்கியது.
தொடர்ந்து, மதியபூஜை, தீபாராதனை, காட்டு நாயக்கர் கலாச்சார நடனம், பெண்களின் கும்மி ஆட்டம், கலாசார பூஜைகள் நடந்தது. 25ம் தேதி காலை பூஜை, கலாசார பூஜைகள், தாலப்பொலி ஊர்வலம், அன்னதானம் நடந்தது. பக்தர்கள் தங்கள் தோட்டங்களில் விளைவித்த விவசாய பொருட்களை நேர்த்திக்கடனாக செலுத்தினர்.
அதில், 14 நாட்கள் விரதம் இருந்த சாமியாடிகள் முத்தப்பன் மற்றும் மாரியம்மன் வேடமிட்டு பக்தர்களுக்கு அருள் ஆசி வழங்கினர். பிரசாதமாக மஞ்சள் கலந்த அரிசி வழங்கப்பட்டதுடன், தேங்காய் உடைத்து பக்தர்களின் குறைகள் குறித்து, சாமியாடிகள் தெரிவித்தனர். இந்த நிகழ்ச்சியில் பழங்குடியின மக்கள் மற்றும் உள்ளூர் கிராம மக்கள் பங்கேற்றனர்.
ஏற்பாடுகளை, தலைவர் குட்டன், செயலாளர் சந்திரன், அருண், சுந்தரன் ஆகியோர் தலைமையில் விழா கமிட்டியினர் செய்திருந்தனர்.