/
உள்ளூர் செய்திகள்
/
நீலகிரி
/
பாரம்பரிய ஊட்டச்சத்து உணவு திருவிழா
/
பாரம்பரிய ஊட்டச்சத்து உணவு திருவிழா
ADDED : செப் 19, 2024 09:34 PM

கூடலுார் : கூடலுார் குணில் பகுதியில், பாரம்பரிய ஊட்டச்சத்து உணவு திருவிழா நடந்தது.
கூடலுார், முதுமலை ஊராட்சிக்கு உட்பட்ட, குணில் கிராமத்தில், தமிழ்நாடு ஊரக வாழ்வாதார இயக்கம் சார்பில் பாரம்பரிய ஊட்டச்சத்து உணவு திருவிழா நடந்தது. விழாவுக்கு, இயக்கத்தின் மேற்பார்வையாளர் உஷா தலைமை வகித்தார். ஊராட்சி கவுன்சிலர் நாராயணன் விழாவை துவக்கி வைத்தார்.
விழாவில், பாரம்பரிய உணவின் மகத்துவம், ரத்த சோகை பாதித்தவர்கள், வளர் இளம் பெண்கள், பாலுாட்டும் தாய்மார்களும் உண்ண வேண்டிய உணவுகள் குறித்து விளக்கினர்.
விழாவில், மகளிர் சுய உதவி குழுக்கள் சமைத்த ஊட்டச்சத்து உணவுகள் காட்சிக்கு வைக்கப்பட்டிருந்தது. விழாவில், முதுமலை ஊராட்சி அளவிலான கூட்டமைப்பு நிர்வாகிகள் பங்கேற்றனர்.