தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/நீலகிரி/சந்திரநகர் சந்திப்பில் போக்குவரத்து மாற்றம்: நாளையும் சோதனை ஓட்டம்

சந்திரநகர் சந்திப்பில் போக்குவரத்து மாற்றம்: நாளையும் சோதனை ஓட்டம்

சந்திரநகர் சந்திப்பில் போக்குவரத்து மாற்றம்: நாளையும் சோதனை ஓட்டம்


UPDATED : நவ 22, 2026 06:51 PM

ADDED : நவ 22, 2026 05:36 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : நவ 22, 2026 06:51 PM ADDED : நவ 22, 2026 05:36 PM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

பாலக்காடு: கோவை--கொச்சி தேசிய நெடுஞ்சாலையில் புதிய மேம்பாலம் கட்டுமானப் பணிகள் தொடங்கவுள்ளதை முன்னிட்டு, பாலக்காடு சந்திரநகர் சந்திப்பில் (ஜங்ஷன்) செயல்படுத்தப்படவுள்ள போக்குவரத்து மாற்றங்களுக்கான சோதனை ஓட்டம் (ட்ரையல் ரன்) இன்றும், நாளையும் (23ம் தேதி) நடைபெறுகிறது.

சந்திப்பை முழுமையாக மூடுவதற்கு முன்பாக, போக்குவரத்து நெரிசலைத் தவிர்ப்பதற்கும் புதிய வழித்தடங்களின் செயல்பாடுகளை ஆய்வு செய்வதற்கும், இந்தச் சோதனை ஓட்டம் நடத்தப்படுகிறது.

இதற்காக, சந்திரநகர் சந்திப்பு அடி பாதையில் புதிதாகத் தற்காலிகச் சாலை ஒன்று அமைக்கப்பட்டுள்ளது. பாலக்காடு நகரம் மற்றும் கோழிக்கோடு நோக்கிச் செல்லும் வாகனங்கள், இந்தப் புதிய சாலை வழியாகவே இயக்கப்பட உள்ளன.

இரண்டு நாள் சோதனை ஓட்டத்தின் முடிவுகளை ஆய்வு செய்த பிறகே, போக்குவரத்து மாற்றங்கள் முழுமையாக அமல்படுத்தப்படும்.

இன்னும் 10 மாதங்களுக்குள் மேம்பாலக் கட்டுமானப் பணிகளை முடிக்க, ஒப்பந்த நிறுவனம் இலக்கு நிர்ணயித்துள்ளது. எனவே, வாகன ஓட்டுனர்கள் போக்குவரத்து மாற்றங்களுக்கு முழு ஒத்துழைப்பு வழங்குமாறு, நெடுஞ்சாலைத் துறை மற்றும் காவல்துறை அதிகாரிகள் கேட்டுக்கொண்டுள்ளனர்.

மாற்றுப்பாதை விவரங்கள்



* கோவையிலிருந்து கோழிக்கோடு பைபாஸ், கல்மண்டபம் செல்லும் வாகனங்கள்: தற்போது சர்வீஸ் சாலை வழியாக வந்து, அடிப்பாதை வழியே வலதுபுறம் திரும்புவதற்குப் பதிலாக, சந்திரநகர் மேம்பாலத்திற்கு அடியில் 'ஆஹாரா' உணவகத்திற்கு முன்பாக அமைக்கப்பட்டுள்ள புதிய சாலை வழியாகக் கல்மண்டபம் சாலையை அடையலாம்.

* கோவையிலிருந்து திருச்சூர் செல்லும் வாகனங்கள்: வழக்கம்போல பிரிவுசாலை என்ற பகுதியில் தொடங்கும் மேம்பாலம் வழியாகப் பயணிக்கலாம்.

* கோழிக்கோடு பைபாஸிலிருந்து திருச்சூர் செல்லும் வாகனங்கள்: சந்திரநகர்-பிரிவுசாலை சர்வீஸ் சாலை வழியாக, ஹோட்டல் ஸ்ரீசக்ரா அருகேயுள்ள கூட்டுப்பாதை பகுதிக்குச் சென்று, அடிப்பாதை வழியாக 'யூ-டர்ன்' (U-turn) எடுத்து எதிர்ப்புற சர்வீஸ் சாலையில் நுழைய வேண்டும். பின்னர் பிரிவுசாலை சந்திப்பு வழியாக மேம்பாலத்தில் ஏறிச் செல்லலாம்.

* திருச்சூரிலிருந்து பொள்ளாச்சி செல்லும் வாகனங்கள்: சந்திரநகர் மேம்பாலம் வழியாகச் சென்று மருதரோடு சந்திப்பில் உள்ள பெட்ரோல் பங்க் அருகே திரும்பி, சர்வீஸ் சாலையில் இணைய வேண்டும். அங்கிருந்து கூட்டுப்பாதை பகுதி வழியாகப் பொள்ளாச்சிக்குச் செல்லலாம்.

* திருச்சூரிலிருந்து பாலக்காடு - கோழிக்கோடு செல்லும் வாகனங்கள்: காடாங்கோடு சந்திப்புக்கு வந்து மணப்புள்ளிக்காவு சாலை வழியாகத் திரும்பிச் செல்ல வேண்டும்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us