ADDED : செப் 14, 2026 05:52 PM
பாலக்காடு: விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு, இன்று பாலக்காடு நகரில் விநாயகர் விசர்ஜன ஊர்வலம் நடப்பதால், போக்குவரத்து மாற்றம் செய்யப் பட்டுள்ளது.
பாலக்காடு மாவட்ட போலீஸ், போக்குவ ரத்து தகவல் பிரிவு வெளியிட்டுள்ள அறிக்கை:
விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு இன்று (செப்., 15ம் தேதி), பாலக்காடு நகரில் விநாயகர் விசர்ஜன ஊர் நடப்பதால், மதியம் 1:00 மணி முதல், ஊர்வலம் முடி யும் வரை போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டு, கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது.
கோழிக்கோடு, மண்ணார்க்காடு, முண்டூர், ரயில்வே காலனி, மலம்புழா பகுதியிலிருந்து வரும் தனியார் பஸ்கள் உட்பட அனைத்து வாகனங்களும், மதியம், 2:00 மணி முதல் ஒலவக்கோடு பேழுங்கரை, மேப்பரம்பு வழியாக அரசு பஸ் ஸ்டாண்ட், மிஷன் பள்ளி, ஐ.எம்.ஏ., சந்திப்புவழி ஸ்டேடியம் பஸ் ஸ்டாண்ட் வந்து வழியே திரும்பிச் செல்ல வேண்டும்.
கோழிக்கோடு, மண்ணார்க்காடு, முண்டூர் பகுதியிலிருந்து வரும் அரசு பஸ்கள், ஒலவக்கோடு பேழுங்கரை, மேப்பரம்பு வழியாக அரசு பஸ் ஸ்டாண்ட் வந்து, அதே வழியே திரும்பிச் செல்ல வேண்டும்.
வாளையார் பகுதியில் இருந்து கோழிக்கோடு, மண்ணார்க்காடு பகுதிக்குச் செல்லும் அனைத்து வாகனங்களும், சந்திரநகர், கல்மண்டபம், கோட்டை மைதானம், அரசு பஸ் ஸ்டாண்ட், மேப்பரம்பு, கல்லேக்காடு, பரளி சோதனைச்சாவடி, கம்பா, முண்டூர் வழியாகவும், அது வழியே திரும்பி வாளையார் பகுதிக்கும் செல்ல வேண்டும்.
மதியம், 2:00 மணிக்கு பின், ஸ்டேடியம் பஸ் ஸ்டாண்ட் சந்திப்பில் இருந்தும், ஐந்து விளக்கு சந்திப்பில் இருந்தும், தாரைக்காடு சந்திப்பில் இருந்தும், சுல்தான்பேட்டை சந்திப்பிற்கு நுழைய அனுமதி இல்லை.
பாலக்காடு நகராட்சி பஸ் ஸ்டாண்டுக்கு ஊர்வலம் முடியும் வரை, வாகனங்கள் நுழைய அனுமதி இல்லை. ஊர்வலத்தை முன்னிட்டு, மாலை, 4:00 மணி முதல் இரவு, 10:00 மணி வாளையார் பகுதியில் இருந்து கோழிக்கோடு பகுதிக்கு வரும் கனரக வாகனங்கள் வாளையார் டோல் பிளாசா அருகாமையில் உள்ள பார்க்கிங் பகுதிகளில் நிறுத்தப்பட வேண்டும்.
அதேபோல், கோழிக்கோடு, மண்ணார்க்காடு பகுதியில் இருந்து வரும் கனரக வாகனங்கள் முண்டூர் அருகாமையில் உள்ள பார்க்கிங் பகுதிகளில் நிறுத்தப்பட வேண்டும்.
இவ்வாறு, அதில் கூறப்பட்டுள்ளது.
