/
உள்ளூர் செய்திகள்
/
நீலகிரி
/
வாகன நெரிசல்: நடவடிக்கை எடுக்க வலியுறுத்தல்
/
வாகன நெரிசல்: நடவடிக்கை எடுக்க வலியுறுத்தல்
ADDED : பிப் 10, 2024 01:06 AM
குன்னுார்;குன்னுார் நகரப்பகுதி, அரசு மருத்துவமனை மார்க்கெட், சிம்ஸ் பார்க், கோத்தகிரி சாலை உள்ளிட்ட பகுதிகளுக்கு செல்லும் முக்கிய சந்திப்பு பகுதியாக உள்ளது.
காலை மற்றும் மதிய நேரங்களில் ரயில் கேட் மூடப்படும் போது கடும் போக்குவரத்து, நெரிசல் ஏற்படுகிறது. இதனை தவிர்க்க, ஆட்டோ ஸ்டாண்ட் வரை பாலத்தை நீட்டித்து, புறக்காவல் நிலையம் அதன் மேல் அமைக்க வலியுறுத்தப்பட்டுஉள்ளது.
லஞ்சம் இல்லா நீலகிரி அமைப்பு ஒருங்கிணைப்பாளர் மனோகரன் கூறுகையில், ''குன்னுார் பஸ் ஸ்டாண்ட் அருகே புறகாவல் நிலையத்தில் உள்ள காவலர் நிழற்குடை பயனின்றி உள்ளது. இருசக்கர வாகனங்களும் அதிக அளவில் நிறுத்தப்பட்டுள்ளது.
இதனால், சாலை குறுகளாக உள்ளதால் வாகன போக்குவரத்திற்கு சிரமம் ஏற்பட்டு வருகிறது. அவசியமில்லாமல் உள்ள நிழற்குடையை அகற்றி போக்குவரத்தை சீர்படுத்த வேண்டும், அருகில் இடம் மாற்றம் செய்வதும் போக்குவரத்துக்கு பாதிப்பு ஏற்படுவது குறையும்,'' என்றார்.