/
உள்ளூர் செய்திகள்
/
நீலகிரி
/
பந்தலுார் அருகே ஆட்டோக்களால் போக்குவரத்து பாதிப்பு
/
பந்தலுார் அருகே ஆட்டோக்களால் போக்குவரத்து பாதிப்பு
பந்தலுார் அருகே ஆட்டோக்களால் போக்குவரத்து பாதிப்பு
பந்தலுார் அருகே ஆட்டோக்களால் போக்குவரத்து பாதிப்பு
ADDED : நவ 17, 2025 01:09 AM
பந்தலூர்: பந்தலூர் அருகே பிதர்காடு பஜார் பகுதியில், சாலையில் நிறுத்தப்படும் வாகனங்களால் அடிக்கடி போக்குவரத்து பாதிக்கப்படுகிறது.
பந்தலூர் அருகே அமைந்துள்ளது பிதர்காடு பஜார் பகுதி. பந்தலூர் மற்றும் கூடலூர், தாலுக்கா பகுதிகளிலிருந்து, கேரளா மாநிலம் வயநாடு செல்லும் நெடுஞ்சாலை, இந்த வழியாக செல்கிறது.
இதனால் இருமாநில அரசு மற்றும் தனியார் வாகனங்கள் அதிக அளவில் வந்து செல்வதுடன், ஆம்புலன்ஸ் வாகனங்களும் அடிக்கடி சென்று வரும்.
ஆனால், பஜார் பகுதியில், சாலையில் ஆட்டோக்களை, நிறுத்தி செல்வதால் வாகனங்கள் செல்ல முடியாமல், தினசரி போக்குவரத்து பாதிக்கப்பட்டு வருகிறது.
இந்தப் பகுதியில் போலீசார் ஆய்வு செய்து, சாலையில் நிறுத்தப்படும் வாகன உரிமையாளர்கள் மீது, நடவடிக்கை எடுக்கவும், தொடரும் போக்குவரத்து பாதிப்பை கட்டுப்படுத்தவும் நடவடிக்கை எடுக்க வேண்டும். என. வாகன ஓட்டுனர்கள் வலியுறுத்தி உள்ளனர்.

