ADDED : அக் 21, 2026 07:02 PM

அ நிறம் | அளவு
குன்னுார்: குன்னுாரில் இருந்து ரன்னிமேடு பகுதிக்கு இரு பெட்டிகளுடன் மலை ரயில் இன்ஜின் சோதனை ஓட்டம் நடந்தது.
இந்த இன்ஜின் இன்று மாலை, 2:45 மணியளவில் மீண்டும் குன்னுார் வந்த போது லெவல் கிராசிங் அருகே திடீரென நின்றது. தொடர்ந்து பழுது சரி செய்யப்பட்டு ஸ்டேஷன் சென்றது. அப்போது, ஊட்டியில் இருந்து மேட்டுப்பாளையம் புறப்பட்ட ரயிலும், 3:20 மணிக்கு சென்றது. ஒரே சமயத்தில் இரு ரயில்கள் கிராசிங் செய்ததால், குன்னுார்– மேட்டுப்பாளையம், ஊட்டி, மவுன்ட் ரோடு உட்பட அனைத்து சாலைகளிலும் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. சுற்றுலா பயணிகளின் வாகனங்களும் அதிகரித்ததால், 2 மணி நேரத்திற்கு மேல் பாதிப்பு ஏற்பட்டது. இதனால், மக்கள் சிரமப்பட்டனர். அதன் பின்னர் போக்குவரத்து சீரானது.
