/
உள்ளூர் செய்திகள்
/
நீலகிரி
/
கூடலுாரில் தீ தடுப்பு பணிவன ஊழியர்களுக்கு பயிற்சி
/
கூடலுாரில் தீ தடுப்பு பணிவன ஊழியர்களுக்கு பயிற்சி
ADDED : ஜன 14, 2025 08:24 PM

கூடலுார்:
முதுமலை வன ஊழியர்களுக்கு தீ தடுப்பு குறித்து சிறப்பு பயிற்சி நடந்தது.
கூடலுார் ஜீன்பூல் சூழல் சுற்றுலா தாவர மையத்தில், கூடலுார் வனக்கோட்டம், முதுமலை புலிகள் காப்பக வன ஊழியர்களுக்கு தீ தடுப்பு குறித்த பயிற்சி முகாம் நடந்தது.
வன அலுவலர் வெங்கடேஷ் பிரபு தலைமை வகித்து பேசுகையில், ''முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுப்பது மூலம் வனத்தீ ஏற்படுவதை தடுக்க முடியும். வனத் தீ பாதிப்பு குறித்து பொதுமக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும்,'' என்றார்.
முதுமலை துணை இயக்குனர் வித்யா பேசுகையில், ''வனத்தீ ஏற்பட்டால், வனத்துக்கும் வனவிலங்குகளுக்கும் பாதிப்பு ஏற்படும். பல தாவரங்கள் அழிந்துவிடும் சூழல் உள்ளது.தீ ஏற்படுவதற்கான காரணங்களை கண்டறிந்து முன்னெச்சரிக்கையாக தடுப்பது அவசியம். வனத்தீ ஏற்பட்டால், விரைந்து செயல்பட்டு அதனை கட்டுப்படுத்தி, தீ பரவுவதை தடுக்க முடியும். இப்பணியில் ஈடுபடும் ஊழியர்கள், எச்சரிக்கையும் பாதுகாப்பாக செயல்பட வேண்டும்,'' என்றார்.
கூடலுார் தீயணைப்பு நிலைய அலுவலர் மார்ட்டின் மற்றும் தீயணைப்பு வீரர்கள், 'வனத்தீயை கட்டுப்படுத்தும் முறைகள் குறித்து, தீயணைப்பு கருவிகளை பயன்படுத்தும் முறைகள்,' குறித்து செயல் விளக்க பயிற்சி அளித்தார். உதவி வனப் பாதுகாவலர் கருப்பையா உட்பட பலர் பங்கேற்றனர்.