தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/நீலகிரி/ மண்டல அலுவலர்களுக்கு தேர்தல் பணிகள் குறித்து பயிற்சி

 மண்டல அலுவலர்களுக்கு தேர்தல் பணிகள் குறித்து பயிற்சி

 மண்டல அலுவலர்களுக்கு தேர்தல் பணிகள் குறித்து பயிற்சி


ADDED : மார் 26, 2026 10:19 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : மார் 26, 2026 10:19 PM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

கூடலுார்: கூடலுார் சட்டசபை தொகுதியில் பணியாற்ற உள்ள, ஓட்டுச்சாவடி மண்டல அலுவலர்களுக்கும் தேர்தல் பணிகள் குறித்து, கலெக்டர் சிறப்பு பயிற்சி அளித்தார்.

கூடலுார் ஆர்.டி.ஓ., அலுவலகத்தில் கூடலுார் சட்டசபை தொகுதி ஓட்டுச்சாவடி மண்டல அலுவலர்களுக்கான சிறப்பு பயிற்சி முகாம் நடந்தது. முகமுக்கு மாவட்ட கலெக்டர் லட்சுமி பவ்யா தலைமை வகித்து, 'தேர்தல் விதிமுறைகள், ஓட்டு பதிவு நாளில் மேற்கொள்ள வேண்டிய பணிகள், மண்டல அலுவலர்கள் ஓட்டு சாவடியை ஆய்வு செய்தல், மின்னணு இயந்திரங்களை பாதுகாப்பதற்கு கொண்டு செல்லுதல், மாதிரி வாக்குப்பதிவு நடத்துவது, குறித்து பயிற்சி அளித்தார்.

முகாமில் கூடலூர் ஆர்.டி.ஓ., குணசேகரன், மண்டல தேர்தல் அலுவலர்கள் பங்கேற்றனர்.

'பயிற்சி பெற்ற மண்டல தேர்தல் அலுவலர்கள், தொடர்ந்து வாக்குச்சாவடி அலுவலர்களுக்கு தேர்தல் பணிகள் குறித்து பயிற்சி அளிக்க உள்ளனர்' என, அதிகாரிகள் தெரிவித்தனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us