/
உள்ளூர் செய்திகள்
/
நீலகிரி
/
நாற்று பண்ணை உருவாக்குதல் பயிற்சி :திரளான விவசாயிகள் பங்கேற்பு
/
நாற்று பண்ணை உருவாக்குதல் பயிற்சி :திரளான விவசாயிகள் பங்கேற்பு
நாற்று பண்ணை உருவாக்குதல் பயிற்சி :திரளான விவசாயிகள் பங்கேற்பு
நாற்று பண்ணை உருவாக்குதல் பயிற்சி :திரளான விவசாயிகள் பங்கேற்பு
ADDED : நவ 19, 2025 04:29 AM

கோத்தகிரி: கோத்தகிரி உயிலட்டி கிராமத்தில் நாற்றுப்பண்ணை உருவாக்குதல் குறித்து, விவசாயிகளுக்கு பயிற்சி அளிக்கப்பட்டது.
சி.பி.ஆர்., சுற்றுச்சூழல் கல்வி மையம், மத்திய அரசின் சுற்றுச்சூழல் வனம் மற்றும் பருவ நிலை மாற்றம் துறை சார்பில் நடந்த நிகழ்ச்சியில், தோட்டக்கலை துணை இயக்குனர் ஜெயலட்சுமி பயிற்சி துவக்கி வைத்து பேசுகையில், ''மண்வளத்தை மேம்படுத்த இயற்கை இடுப்பொருட்களை படிப்படியாக விவசாயத்தில் அதிக அளவு பயன்படுத்த வேண்டும். நாற்று பண்ணைக்கு தேவையான மண், மணல் மற்றும் தொழு உரம் பயன்படுத்துவதை அறிந்து பல்வேறு வகையான நாற்றுகள் வேதி உரங்களை பயன்படுத்தாமல், இயற்கை முறையில் உற்பத்தி செய்வது அவசியம்,'' என்றார்.
இயற்கை விவசாயி ராம்தாஸ், இயற்கை முறையில் மண்வளத்தை மேம்படுத்துவதன் அவசியம் குறித்து விளக்கினார்.
சி.பி.ஆர்., சுற்றுச்சூழல் கள அலுவலர் குமாரவேலு, பயிற்சியின் முக்கியத்துவம், நோக்கம் குறித்து விளக்கம் அளித்தார். தோட்டக்கலை அலுவலர் கவின் பிரசாத் நீர் மாசு குறித்து விளக்கினார். கிராம தலைவர் ராமச்சந்திரன் சுய உதவி உறுப்பினர்கள் மற்றும் விவசாயிகள் பல பயிற்சி பெற்றனர்.

