/
உள்ளூர் செய்திகள்
/
நீலகிரி
/
இடமாற்றம் மின் கட்டணம் செலுத்தும் மையம் இடமாற்றம்
/
இடமாற்றம் மின் கட்டணம் செலுத்தும் மையம் இடமாற்றம்
ADDED : ஜூன் 01, 2025 11:06 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கோத்திகிரி: கோத்தகிரி வெஸ்ட் புரூக் பகுதியில், தமிழ்நாடு மின் பகிர்மான கழகத்திற்கு உட்பட்ட உதவி மின் பொறியாளர் அலுவலகம், நடுஹட்டி ஊராட்சி அலுவலகம் அருகே, கடந்த பல ஆண்டுகளாக, மின்துறை அலுவலகம் இயங்கி வந்தது. இந்த அலுவலகம் நிர்வாக காரணங்களுக்காக, கோத்தகிரி அணையட்டி பகுதியில் அமைந்துள்ள, 110/33/1I கே.வி., துணை மின் நிலையம் வளாகத்திற்கு மாற்றப்பட்டுள்ளது.
இதில் குறிப்பிட்ட கிராம மக்கள் இனி வரும் நாட்களில் அணையட்டி துணை மின் நிலைய வளாகத்தை அணுகலாம். இந்த தகவலை மின்துறை உதவி செயற்பொறியாளர் (நகரம்) மாதன் தெரிவித்துள்ளார்.