/
உள்ளூர் செய்திகள்
/
நீலகிரி
/
சுற்று பஸ் இயக்கத்தில் 8 தனியார் மினி பஸ்கள்; போக்குவரத்து கழகம் நடவடிக்கை
/
சுற்று பஸ் இயக்கத்தில் 8 தனியார் மினி பஸ்கள்; போக்குவரத்து கழகம் நடவடிக்கை
சுற்று பஸ் இயக்கத்தில் 8 தனியார் மினி பஸ்கள்; போக்குவரத்து கழகம் நடவடிக்கை
சுற்று பஸ் இயக்கத்தில் 8 தனியார் மினி பஸ்கள்; போக்குவரத்து கழகம் நடவடிக்கை
UPDATED : ஏப் 24, 2025 11:48 PM
ADDED : ஏப் 24, 2025 11:04 PM

ஊட்டி, ; ஊட்டியில் சுற்று பேருந்து இயக்கத்தில், 8 தனியார் மினி பஸ்கள் இணைக்கப்பட்டுள்ளன.
சர்வதேச சுற்றுலா தலமான நீலகிரியில் ஒவ்வொரு ஆண்டும் ஏப்., மே மாதங்களில் கோடை சீசன் நடக்கிறது.
இங்கு வரும் சுற்றுலா பயணிகளை மகிழ்விக்க கோடை விழாக்கள் நடத்தப்படுகிறது. கோடை சீசனில் மட்டும், 10 லட்சத்திற்கு மேற்பட்ட சுற்றுலா பயணியர் வந்து செல்கின்றனர்.
ஊட்டிக்கு வரும் சுற்றுலா பயணிகளின் வருகையை பொறுத்து போக்குவரத்து கழகம் சார்பில் சுற்று பஸ்கள் இயக்கப்படுகிறது.
இந்த சுற்று பஸ்சில் பயணம் செய்ய பெரியவர்களுக்கு, 100 ரூபாய், சிறியவர்களுக்கு, 50 ரூபாய் கட்டணமாக வசூலிக்கப்படுகிறது. பஸ்கள் படகு இல்லம், தாவரவியல் பூங்கா, தொட்டபெட்டா சிகரம், ரோஜா பூங்கா வழியாக மீண்டும் மத்திய பஸ் ஸ்டாண்ட் வந்தடையும். இந்த பஸ்சில் ஒரு நாளைக்கு ஒரு முறை பயண சீட்டு வாங்கினால் மட்டுமே போதுமானது. அதனை காண்பித்து அந்த நாள் முழுவதும் பயணம் மேற்கொள்ளலாம்.
போக்குவரத்து கழக பொது மேலாளர் முரளி கூறுகையில்,''சுற்று பஸ்கள் இயக்கத்தில் அரசு பஸ்சுடன், 8 தனியார் மினி பஸ்கள் இணைக்கப்பட்டுள்ளது.
முதற்கட்டமாக, 2 மினி பஸ் இயக்கத்தில் உள்ளது. இதில், கண்டக்டர் அரசு போக்குவரத்து கழகம் சார்பில் நியமிக்கப்படுவர். கி. மீ ., கணக்குப் படி மினி பஸ்களுக்கு போக்குவரத்து கழகம் சார்பில் அதற்கான கட்டணம் வழங்கப்படும்,'' என்றார்.

