/
உள்ளூர் செய்திகள்
/
நீலகிரி
/
மாநில எல்லையில் கழிப்பிட வசதி இல்லாமல் பயணிகள் அவதி
/
மாநில எல்லையில் கழிப்பிட வசதி இல்லாமல் பயணிகள் அவதி
மாநில எல்லையில் கழிப்பிட வசதி இல்லாமல் பயணிகள் அவதி
மாநில எல்லையில் கழிப்பிட வசதி இல்லாமல் பயணிகள் அவதி
ADDED : ஜன 20, 2024 12:10 AM

பந்தலுார்;பந்தலுார் பாட்டவயல் பகுதியில் கழிப்பிட வசதி இல்லாததால் இரு மாநில பயணிகள் அவதிப்படுகின்றனர்.
தமிழக கேரளா எல்லை பகுதியாக, பந்தலுார் அருகே பாட்டவயல் சோதனை சாவடி உள்ளது.
முதுமலை புலிகள் காப்பகம், முத்தங்கா வனவிலங்கு சரணாலயம், கூடலுார் வன கோட்டங்கள் இணையும் பகுதியில், தமிழக- கேரளா மாநில அரசு பஸ்கள் மற்றும் கேரளா மாநில தனியார் பஸ்கள் அதிக அளவில் வந்து செல்கின்றன.
மேலும், 50க்கும் மேற்பட்ட தனியார் வாகனங்களும் இந்த பகுதியில் நிறுத்தி பயணிகளை ஏற்றி செல்கின்றனர். இங்கே கழிப்பிட வசதி ஏதும் இல்லாத நிலையில், இரு மாநில பயணிகள் சிரமப்பட்டு வருகின்றனர்.
இங்கு கழிப்பிட வசதி ஏற்படுத்தி தர வலியுறுத்தி, மக்கள் மற்றும் பயணிகள் புகார்கள் கொடுத்தும், மாவட்ட நிர்வாகமும் உள்ளாட்சி அமைப்புகளும் நடவடிக்கை எடுக்க மறுத்து வருகின்றனர்.
எனவே, தமிழக எல்லை பகுதியில், பயணிகள் பயன்படுத்த ஏதுவாக கழிப்பிட வசதி ஏற்படுத்தி தர உள்ளாட்சி அமைப்புகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.