/
உள்ளூர் செய்திகள்
/
நீலகிரி
/
காலில் சிக்கிய கம்பி; காட்டெருமைக்கு சிகிச்சை
/
காலில் சிக்கிய கம்பி; காட்டெருமைக்கு சிகிச்சை
ADDED : ஏப் 17, 2025 09:05 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
குன்னுார்; குன்னுார் மேலுார் பிரிவுக்கு உட்பட்ட, சின்ன கரும்பாலம் அருகே, 3 வயதுடைய ஆண் காட்டெருமை, வலது பின்னங்காலில் கம்பி சிக்கி காயத்துடன் நடமாடியது.
தகவலின் பேரில், குன்னூர் வனச்சரக அலுவலர் ரவீந்திரநாத் தலைமையில், முதுமலை புலிகள் காப்பக கால்நடை உதவி மருத்துவர் ராஜேஷ்குமார், மயக்க ஊசி செலுத்தினார். காட்டெருமையின் காலில் சிக்கி இருந்த கம்பி அகற்றப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டது.
வனவர் ராம்தாஸ், வனக்காப்பாளர்கள் திலீப், சுப்ரமணி உட்பட வேட்டை தடுப்பு காவலர்கள், ஒரு மணி நேரம் போராடி தீர்வு கண்டனர். பிறகு, காட்டெருமை அங்கிருந்து சென்றது. தொடர்ந்து கண்காணிக்கும் பணி நடந்து வருகிறது.

