பலத்த காற்றில் வீட்டின் மீது சாய்ந்த மரம் மற்றும் மின் கம்பம்
பலத்த காற்றில் வீட்டின் மீது சாய்ந்த மரம் மற்றும் மின் கம்பம்
UPDATED : மே 01, 2026 06:39 PM
ADDED : மே 01, 2026 06:33 PM

பந்தலுார்: பந்தலுார் பகுதியில் பெய்த பலத்த மழையில், வீட்டின் மீது மரம் மற்றும் மின்கம்பம் சாய்ந்து பாதிப்பு ஏற்பட்டது.
பந்தலுார் சுற்றுவட்டார பகுதியில் நேற்று முன்தினம் மாலை சூறை காற்றுடன் மழை பெய்தது. அதில், உப்பட்டி அருகே சேலக்குன்னா பகுதியில் ஜீவா சின்னத்தம்பி என்பவரின் வீட்டுக்கு கூரை மீது, அருகே இருந்த பெரிய கற்பூர மரம் மற்றும் மின்கம்பம் அடியோடு பெயர்ந்து விழுந்தது. அதில், வீட்டின் மேற்கூரை முழுவதுமாக பாதிக்கப்பட்டதுடன், வீட்டு சுவரும் விரிசல் அடைந்தது.
வீட்டிற்குள் இருந்த குடும்பத்தினர் அதிர்ஷ்டவசமாக எந்த பாதிப்பும் இன்றி உயிர்தப்பினர். இது குறித்து தகவல் அறிந்த வனச்சரகர் ரவி தலைமையிலான வனத்துறையினர், கவுன்சிலர் ஸ்ரீகலா சுந்தர் மற்றும் வருவாய் துறையினர், மின்வாரியத்தினர் நேரில் ஆய்வு செய்தனர். 'பாதிக்கப்பட்ட குடும்பத்திற்கு உரிய இழப்பீடு வழங்க வேண்டும்,' என, வலியுறுத்தப்பட்டு உள்ளது.
