தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/நீலகிரி/ மரம் விழுந்து மின்கம்பம் சேதம்

 மரம் விழுந்து மின்கம்பம் சேதம்

 மரம் விழுந்து மின்கம்பம் சேதம்


ADDED : மார் 16, 2026 06:51 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : மார் 16, 2026 06:51 AM


Follow on Google
அ நிறம் | அளவு

குன்னூர்: குன்னூர் டி.டி.கே. சாலையில் மரம் விழுந்ததில், மின்கம்பம் சேதமடைந்து மின்தடை ஏற்பட்டது.

குன்னூரில் கடும் வெயில் வாட்டி வருகிறது. நேற்று காலை 6:30 மணியளவில், காற்றின் வேகம் அதிகமாக இருந்தது. இதில், குன்னூர் - டி.டி.கே சாலையில், மரம் விழுந்தது. இதில் மின் கம்பம், சேதமடைந்தது.

இதனால், ஆப்பிள் பி, வண்ணாரபேட்டை உட்பட பல பகுதிகளில் மின்தடை ஏற்பட்டது. குன்னூர் தீயணைப்பு நிலைய அலுவலர் குமார் மேற்பார்வையில் தீயணைப்பு வீரர்கள் மரத்தை பவர் ஷா உதவியுடன் அறுத்து அகற்றினர். ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.

மின்வாரிய ஊழியர்கள் சீரமைப்பு பணிகளை துரிதமாக மேற்கொண்டனர். இதனால், காலை 11 மணியளவில் மின்வினியோகம் சீரானது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us