/
உள்ளூர் செய்திகள்
/
நீலகிரி
/
மஞ்சூர் சாலையில் மரம் விழுந்து கிராமங்களுக்கு போக்குவரத்து பாதிப்பு

ADDED : ஜூன் 01, 2025 11:31 PM

ஊட்டி : ஊட்டியில், கடந்த மூன்று நாட்களாக மழையின் தாக்கம் குறைந்து காற்று மட்டும் வீசி வருகிறது.
நேற்று மதியம், 12:00 மணி அளவில் ஊட்டி- மஞ்சூர் சாலையில் லவ்டேல் போலீஸ் நிலையம் பகுதியில் ராட்சத கற்பூர மரம், சாலை மற்றும் ரயில்வே தண்டவாளத்தில் விழுந்தது. அதிர்ஷ்டவசமாக சாலையில் யாரும் அந்த நேரத்தில் செல்லாததால் அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டது.
மரம் விழுந்த தகவல் அறிந்து தீயணைப்பு நிலைய அலுவலர் ஸ்ரீதர் தலைமையிலான குழுவினர் சம்பவ இடத்திற்கு சென்று மரத்தை பவர்ஷா உதவியுடன் அகற்றினர். மரம் சாலையில் விழுந்ததால் சுமார் ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. வாகனங்கள் நீண்ட துாரம் சாலையில் அணிவகுத்து நின்றன. ஒரு சில வாகனங்கள் மாற்று பாதையில் திருப்பி விடப்பட்டன. மரம் அகற்றிய பின்னர் போக்குவரத்து சீரானது. இதேபோல் மற்ற இடங்களில் ஏற்கனவே விழுந்த மரங்களையும் வனத்துறையினர் வெட்டி முழுமையாக அகற்றும் பணியில் ஈடுபட்டுள்ளனர். ரயில்வே தண்டவாளத்தில் மரம் விழுந்ததால் ஊட்டியில் இருந்து மேட்டுப்பாளையம் சென்ற ரயில் மற்றும் ஊட்டி வந்த ரயில் அரை மணி நேரம் தாமதமாக சென்றது.