/
உள்ளூர் செய்திகள்
/
நீலகிரி
/
சாலை நடுவே வளரும் மரம்: மக்கள் அதிருப்தி
/
சாலை நடுவே வளரும் மரம்: மக்கள் அதிருப்தி
ADDED : அக் 28, 2025 11:54 PM

கூடலுார்: கூடலுார், புளியாம்பாறை அருகே, சிமென்ட் சாலை நடுவே போக்குவரத்துக்கு இடையூறாக உள்ள மின் கம்பத்தை ஒட்டி மரம் வளர்வதால் மக்கள் அதிருப்தி அடைந்துள்ளனர்.
கூடலுார், புளியம்பாறை ஜங்ஷனில் இருந்து காபிகாடு சாலை பிரிந்து செல்கிறது. இச்சாலையை அத்துார், கொல்லுார், கல்லிகொல்லி மற்றும் காபிகாடு பழங்குடி மக்கள் பயன்படுத்தி வருகின்றனர்.
சில ஆண்டுகளுக்கு முன் தேவர்சோலை பேரூராட்சி சார்பில், மண் சாலை சிமென்ட் சாலையாக சீரமைக்கப்பட்டது.
இச்சாலை நடுவே, போக்குவரத்துக்கு இடையூறாக உள்ள மின் கம்பம் மாற்றப்படவில்லை. இதை மாற்ற வலியுறுத்தியும் இதுவரை நடவடிக்கை இல்லை.
இந்நிலையில், மின்கம்பத்தை ஒட்டி, மரக்கன்று வளர துவங்கியுள்ளது. இவை பெரிதானால் போக்குவரத்துக்கு மேலும், இடையூறு ஏற்படும். எனவே சாலை நடுவே உள்ள மின்கம்பத்தை சாலையோரம் மாற்ற மக்கள் வலியுறுத்தி உள்ளனர்.

