/
உள்ளூர் செய்திகள்
/
நீலகிரி
/
மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழு சார்பில் மரக்கன்று நடவு பணி துவக்கம்
/
மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழு சார்பில் மரக்கன்று நடவு பணி துவக்கம்
மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழு சார்பில் மரக்கன்று நடவு பணி துவக்கம்
மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழு சார்பில் மரக்கன்று நடவு பணி துவக்கம்
ADDED : ஏப் 18, 2025 11:56 PM

ஊட்டி: மாநில சட்டப்பணிகள் ஆணைக்குழு அறிவுறுத்தல் படி, மரம் நடும் திட்டம், அனைத்து மாவட்டங்களிலும் அரசு துறைகளின் சார்பில் நேற்று துவக்கப்பட்டது.
இதன் ஒரு பகுதியாக, நீலகிரி மாவட்ட சட்டப்பணிகள் ஆணை குழு மற்றும் மாவட்ட நிர்வாகம் சார்பில், எம். பாலாடா 'ஏகலைவா' மாதிரி உறைவிட பள்ளியில், மரம் நடும் திட்ட துவக்க விழா மற்றும் சட்ட விழிப்புணர்வு முகாம் நடந்தது.
மாவட்ட சட்டப்பணிகள் ஆணை குழு தலைவர் மாவட்ட நீதிபதி முரளிதரன் நிகழ்ச்சியை துவக்கி வைத்தார். கலெக்டர் லட்சுமி பவ்யா தலைமை வகித்தார்.
நிகழ்ச்சியில், தேசிய சட்டப் பணிகள் ஆணை குழுவின் திட்டங்கள், செயல்பாடுகள் குறித்து, மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழு செயலாளர் சார்பு நீதிபதி பாலமுருகன் விளக்கினார். மாவட்ட வன அலுவலர் கவுதம், சூழலியல் பாதுகாப்பு குறித்து பேசினார்.
ஊட்டி ஆர்.டி.ஓ., சதீஷ்குமார் மற்றும் மாவட்ட சமூக நல அலுவலர் பிரவீணா தேவி ஆகியோர், அரசின் நலத்திட்டங்கள் குறித்தும் அதனை எவ்வாறு பெறுவது என்பது குறித்து விளக்கம் அளித்தனர்.
கூடுதல் கலெக்டர் கவுசிக், ஏ.டி.எஸ்.பி.,க்கள் மணிகண்டன், சவுந்திரராஜன், வக்கீல் சங்க துணை தலைவர் பால நந்தகுமார் மற்றும் செயலாளர் மேனகா முன்னிலை வகித்தனர்.
தொடர்ந்து, 80 மரக்கன்றுகள் பள்ளி வளாகத்தில் நடுவு செய்யப்பட்டன. இதே போல, குன்னுார், கூடலுகர், பந்தலுார், கோத்தகிரியில் மரக்கன்றுகள் நடப்பட்டன. மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக் குழு சார்பில், மாவட்டம் முழுவதும், 3,000 மரக்கன்றுகள் நடவு செய்ய திட்டமிடப்பட்டுள்ளது.
நிகழ்ச்சியில், மாவட்ட உரிமையியல் நீதிபதி மோகன கிருஷ்ணன் நன்றி கூறினார்.