/
உள்ளூர் செய்திகள்
/
நீலகிரி
/
பொங்கல் விழாவில் பழங்குடியினர் இசை
/
பொங்கல் விழாவில் பழங்குடியினர் இசை
ADDED : ஜன 18, 2024 01:59 AM

பந்தலுார் : பந்தலுாரில் நடந்த பொங்கல் விழாவில் பழங்குடியினர் இசையுடன் கலாசார நடனம் இடம் பெற்றது.
பந்தலுாரில் செயல்படும் ஸ்ரீ விவேகானந்தர் இளைஞர் மன்றம் சார்பில், ஆண்டுதோறும் திருவள்ளுவர் தினத்தை முன்னிட்டு பொங்கல் விழா நடப்பது வழக்கம். நேற்று காலை விழா ஒருங்கிணைப்பாளர் சுரேஷ் தலைமையில்,கோபூஜை மற்றும் குத்துவிளக்கு ஏற்றுதலுடன் நிகழ்ச்சிகள் துவங்கியது.
தொடர்ந்து பெண்கள் பங்கேற்ற விழா நடந்தது. பொங்கல் வைக்கப்பட்டு பாரத தாய்க்கு சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டது. ஸ்ரீமதுரை ஊராட்சி தலைவர் சுனில், காட்டு நாயக்கர் சமுதாய தலைவர் சந்திரன், கூட்டுறவு சங்க பணியாளர் செல்வராஜ் ஆகியோர் துவக்கி வைத்தனர்.
தொடர்ந்து, காட்டு நாயக்கர் சமுதாயம் பழங்குடியின மக்களின் கலாசார நடனம் மற்றும் வாத்திய இசையுடன் கலைவிழா நிகழ்ச்சிகள் தொடங்கியது. அதனை தொடர்ந்து பல்வேறு கலை நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு, பங்கேற்றவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது.
நிகழ்ச்சியில் சிறுவர் களுக்கான ஓட்டப்பந்தயம், பெண்களுக்கான இசை நாற்காலி, கயிறு இழுத்தல், பானை உடைத்தல், வழுக்கு மரம் ஏறுதல், உள்ளிட்ட பல்வேறு போட்டிகள் நடத்தப்பட்டு வெற்றி பெற்றவர் களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது.
மேலும், பொங்கல் விழாவுக்கு கடந்த வாரம் நடந்த பெண்களுக்கான கோல போட்டிகள் மற்றும் பள்ளி மாணவர்களுக்கான கட்டுரை மற்றும் பேச்சு போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கும் பரிசு வழங்கப்பட்டது.
தொடர்ந்து, இசை நிகழ்ச்சிகள் நடந்தது. ஏற்பாடுகளை ஜெகன், யோகேஸ்வரன், முரளி, அண்ணாதுரை, சாந்தி, மல்லிகா, செல்வி ஆகியோர் தலைமையிலான குழுவினர் செய்திருந்தனர்.