/
உள்ளூர் செய்திகள்
/
நீலகிரி
/
பொங்கல் கொண்டாடிய பழங்குடியின மக்கள்
/
பொங்கல் கொண்டாடிய பழங்குடியின மக்கள்
ADDED : ஜன 12, 2024 11:28 PM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
பந்தலுார்;பந்தலுார் அருகே உள்ள முதுமலை பென்னை கிராம மக்கள் பொங்கல் பண்டிகை கொண்டாடினர்.
பந்தலுார் அருகே முதுமலை புலிகள் காப்பக வனத்தில் பென்னை கிராமம் அமைந்துள்ளது. இங்கு பென்னை அரசு துவக்கப்பள்ளி சார்பில் பொங்கல் விழா நடந்தது. வனத்திற்கு மத்தியில், வண்ண கோலங்கள் இட்டு பொங்கல் வைத்து வன தேவதைக்கும், விவசாயிகளுக்கும் நன்றி தெரிவித்து பூஜைகள் செய்யப்பட்டது.
தலைமை ஆசிரியர் முருகேசன் தலைமையில் நடந்த நிகழ்ச்சியில், பழங்குடியின மக்கள், பெற்றோர், மாணவர்கள் பங்கேற்று பொங்கல் விழாவை கொண்டாடினர். பங்கேற்ற அனைவருக்கும், பழங்குடியின மாணவர்கள் சார்பில் பொங்கல் வழங்கி அனைவருக்கும் வாழ்த்து தெரிவிக்கப்பட்டது.