/
உள்ளூர் செய்திகள்
/
நீலகிரி
/
குன்னுார் அருகே சின்னாள கொம்பை கிராமத்தில் பழங்குடியினர் அவதி! சாலை வசதி கூட இல்லாததால் மழை காலத்தில் சிக்கல்
/
குன்னுார் அருகே சின்னாள கொம்பை கிராமத்தில் பழங்குடியினர் அவதி! சாலை வசதி கூட இல்லாததால் மழை காலத்தில் சிக்கல்
குன்னுார் அருகே சின்னாள கொம்பை கிராமத்தில் பழங்குடியினர் அவதி! சாலை வசதி கூட இல்லாததால் மழை காலத்தில் சிக்கல்
குன்னுார் அருகே சின்னாள கொம்பை கிராமத்தில் பழங்குடியினர் அவதி! சாலை வசதி கூட இல்லாததால் மழை காலத்தில் சிக்கல்
ADDED : டிச 17, 2024 09:45 PM

குன்னுார்: குன்னுார் அருகே சின்னாள கொம்பை பழங்குடியினர் கிராமத்தில் அடிப்படை வசதிகள் இன்னும் நிறைவேற்றப்படாமல் உள்ள நிலையில் மக்கள் அவதிப்படுகின்றனர்.
குன்னுார் அருகே, சின்னாள கோம்பை பழங்குடியின கிராமத்தில், 50க்கும் மேற்பட்ட குடும்பங்கள் உள்ளன. பில்லுார் மட்டத்தில் இருந்து, 7 கி.மீ., தொலைவில் உள்ள இந்த கிராமத்திற்கு அடிப்படை வசதிகள் நிறைவேற்றப்படாமல் உள்ளது. குறிப்பாக, சாலை வசதி இல்லாததால், மக்கள் மண்பாதை வழியாக நடந்து சென்று வருகின்றனர். கிராமத்தில் உள்ள வீடுகளும் இடிந்த நிலையில் உள்ளன.
யானை பள்ளம் வரை சாலை
கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு இடி தாக்கியபோது கர்ப்பிணி உள்ளிட்டோர், 17 மணி நேரத்திற்கு பிறகே மருத்துவமனைக்கு அழைத்து வந்த அவலம் ஏற்பட்டது. இதனால், அப்போதைய கலெக்டர் இன்னசென்ட் திவ்யா, யானை பள்ளம் வரை தார் சாலை அமைக்க நடவடிக்கை எடுத்தார். இதனால், 7 கி.மீ., துாரம் வரை நடந்து சென்ற சின்னாள கொம்பை மக்கள், 5 கி.மீ., துாரம் வரை வாடகை ஜீப்களில் சென்று, அங்கிருந்து 2 கி.மீ., துாரம் தற்போது நடந்து செல்கின்றனர்.
இந்நிலையில், சமீபத்தில் பழங்குடியினர் நலத்துறை உட்கட்டமைப்பு மேம்பாடு நிதியில், 2.60 லட்சம் ரூபாய் செலவில், பொக்லைன் பயன்படுத்தி உலிக்கல் பேரூராட்சி சார்பில், பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது. ஆனால், மண்பாதை தோண்டப்பட்டு பணிகள் முழுமை பெறாமல் உள்ளன.
சேறு, சகதியான மண்பாதை
ஊர் தலைவர் மல்லன் கூறுகையில், ''மண் பாதைவழியாக பைக் சென்று வந்த நிலையில், தற்போது, பாதை முழுவதும் மழையால், சேறு, சகதி நிறைந்து மக்கள் நடமாட முடிவதில்லை. இது குறித்து ஒப்பந்ததாரரிடமும், பேரூராட்சியினரிடமும் பல முறை கூறியும் பணிகள் முழுமையாக நடத்த நடவடிக்கை எடுக்கவில்லை.
இதனால், ரேஷன் உட்பட அத்தியாவசிய பொருட்கள் வாங்கி, 2 கி.மீ., துாரத்திற்கு மேல் நடந்து செல்ல வேண்டியுள்ளது. அவசர காலங்களில் கர்ப்பிணிகள், ஊனமுற்றோரை அழைத்து வர முடியாத சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.
இங்குள்ள வீடுகளும் இடியும் நிலையில் உள்ளதால், மழை நீர் உள்ளே வராமல் இருக்க 'பிளாஸ்டிக்' போர்வைகளால் கூரை களை மூடி உள்ளனர். வீடுகள் கட்டுவதற்கு கட்டுமான பொருட்களும் கொண்டு செல்ல முடியாதுஎன்பதால், அரசின் திட்டங்கள் எதுவும் இங்கு செயல்படுத்தப்படவில்லை.
எனவே, நிதி ஒதுக்கி, தரமான தார்சாலை அமைத்து தர மாவட்ட கலெக்டர் நடவடிக்கை எடுக்க வேண்டும்,'' என்றார்.