/
உள்ளூர் செய்திகள்
/
நீலகிரி
/
கருமாரியம்மன் கோவில் திருவிழா பக்தி பரவசத்தில் பழங்குடியினர்
/
கருமாரியம்மன் கோவில் திருவிழா பக்தி பரவசத்தில் பழங்குடியினர்
கருமாரியம்மன் கோவில் திருவிழா பக்தி பரவசத்தில் பழங்குடியினர்
கருமாரியம்மன் கோவில் திருவிழா பக்தி பரவசத்தில் பழங்குடியினர்
ADDED : மார் 18, 2024 12:10 AM

பந்தலூர்:பந்தலுார் அருகே, பாட்டவயல் முக்குபாடி பகுதியில் உள்ள கருமாரியம்மன் கோவில் விளக்கு திருவிழா காலை பூஜை மற்றும் கொடியேற்றத்துடன் துவங்கியது.
தொடர்ந்து மதிய பூஜை, தீபாராதனை, காட்டு நாயக்கர் கலாசார ஆட்டம் மற்றும் பெண்களின் கும்மி ஆட்டம் நடந்தது.
இரண்டாம் நாளில் பூஜை, ஊர்வலம் அன்ன தானம் மற்றும் குளிய முத்தப்பன் பூஜை நடந்தது.
அதில், மக்கள் தங்கள் தோட்டங்களில் விளைவித்த பொருட்களை கொண்டு வந்து அம்மன் மற்றும் குளியன் தெய்வத்திற்கு வழங்கி, விவசாயம் செழிக்க சிறப்பு பூஜை செய்தனர்.
மேலும், சாமியாடிகள் அண்ணு, சந்திரன் மற்றும் மாதன் ஆகியோர் அருளுடன் வாளால் தங்கள் உடலை கீரி கொண்டு பக்தர்களுக்கு அரிசியை பிரசாதமாக வழங்கி வாக்கு கூறினர். தொடர்ந்து சிறப்பு பூஜைகள் நடத்தப்பட்டு அனைவருக்கும் பிரசாதம் வழங்கப்பட்டது.