/
உள்ளூர் செய்திகள்
/
நீலகிரி
/
வீடு கட்ட உத்தரவு கிடைத்தும் வீண் குடிசையில் வாழும் பழங்குடியினர்
/
வீடு கட்ட உத்தரவு கிடைத்தும் வீண் குடிசையில் வாழும் பழங்குடியினர்
வீடு கட்ட உத்தரவு கிடைத்தும் வீண் குடிசையில் வாழும் பழங்குடியினர்
வீடு கட்ட உத்தரவு கிடைத்தும் வீண் குடிசையில் வாழும் பழங்குடியினர்
ADDED : ஏப் 15, 2025 09:10 PM

பந்தலுார், ;பந்தலுார் பஜாரை ஒட்டிய எம்.ஜி.ஆர்., நகர் பகுதியில் வாழும் பழங்குடியினருக்கு வீடு கட்ட உத்தரவு கிடைத்தும், குடிசையில் வாழும் அவலம் தொடர்கிறது.
பந்தலுார் அருகே நெல்லியாளம் நகராட்சி எல்லைக்கு உட்பட்ட பகுதியில் எம்.ஜி.ஆர்., நகர் அமைந்துள்ளது.
இந்த பகுதியில் பல்வேறு சமூகத்தை சேர்ந்தவர்கள் குடியிருக்கும் நிலையில், பணியர் சமுதாயத்தை சேர்ந்த ஒரு பழங்குடியின குடும்பத்தினர் பல தலைமுறைகளாக குடியிருந்து வருகின்றனர்.
அதில், ஒரு வீட்டில் வசிக்கும் வசந்தா என்பவரின் குடியிருப்பு இடிந்து விழும் நிலையில், இருந்ததால், இவருக்கு தமிழ்நாடு குடிசை பகுதி மாற்று வாரியத்தின் மூலம் கான்ரீட் வீடு அமைக்கும் வகையில், கடந்த, 2018 ம் ஆண்டு, வீடு கட்டும் பணிக்கான உத்தரவு வழங்கப்பட்டது. பல ஆண்டுகள் சென்ற நிலையில் அரசு அதிகாரிகள் இப்பகுதியில் ஆய்வுக்கு கூட வரவில்லை.
வசந்தா கூறுகையில், ''இந்த பகுதியில் பல்வேறு சமூகங்களை சார்ந்த மக்கள் குடியிருந்து வரும் நிலையில், பழங்குடியின எனது வீடு எப்போது வேண்டுமானாலும் விழும் நிலையில் உள்ளது.
அரசிடம் இருந்து வீட்டு பணி வழங்கப்பட்டும், நெல்லியாளம் நகராட்சி கமிஷனர், தலைவர் உள்ளிட்ட அதிகாரிகளிடம் பலமுறை முறையிட்டும் இதுவரை தீர்வு கிடைக்கவில்லை. மழைகாலத்தில் எங்களது குடிசை வீடு முழுமையாக இடிந்து விடுமோ என்ற அச்சத்தில் வாழ்கிறோம். மாவட்ட கலெக்டர்இதற்கு தீர்வு காண நடவடிக்கை எடுக்க வேண்டும்,'' என்றார்.

