/
உள்ளூர் செய்திகள்
/
நீலகிரி
/
சாலையில் உடலை வைத்து பழங்குடியினர் போராட்டம் சுடுகாடு இடத்தை சொந்தம் கொண்டாடிய தனியார் எஸ்டேட்
/
சாலையில் உடலை வைத்து பழங்குடியினர் போராட்டம் சுடுகாடு இடத்தை சொந்தம் கொண்டாடிய தனியார் எஸ்டேட்
சாலையில் உடலை வைத்து பழங்குடியினர் போராட்டம் சுடுகாடு இடத்தை சொந்தம் கொண்டாடிய தனியார் எஸ்டேட்
சாலையில் உடலை வைத்து பழங்குடியினர் போராட்டம் சுடுகாடு இடத்தை சொந்தம் கொண்டாடிய தனியார் எஸ்டேட்
ADDED : ஏப் 22, 2025 11:22 PM
குன்னுார், ; குன்னுார் மூப்பர்காடு அருகே ஊஞ்சலறை கிராமத்தில், 15 க்கும் மேற்பட்ட குரும்பா பழங்குடியின குடும்பங்கள் உள்ளன. இங்கு கடந்த, 21ம் தேதி இரவு 11:00 மணிக்கு பிரேமா,45, என்பவர் உடல்நிலை பாதித்து உயிரிழந்தார். ஏற்கனவே கிராமத்தில் இறந்தவர்களின் உடலை புதைத்த சுடுகாடு இடத்தில் கிராம மக்கள் குழி தோண்டினர். இதற்கு அப்பகுதி சேர்ந்த தனியார் எஸ்டேட் நிர்வாகத்தினர் எதிர்ப்பு தெரிவித்தனர்.
தொடர்ந்து, நேற்று முன்தினம், குன்னுார் தாசில்தார் ஜவகர் தலைமையில் வருவாய் துறையினர், கிராம மக்கள் மற்றும் தனியார் எஸ்டேட் நிர்வாகத்திடம் பேச்சுவார்த்தை நடத்தினர். தொடர்ந்து, இதே இடத்தில் உடலை புதைக்க, வருவாய் துறையினர் உத்தரவிட்டு சென்றனர்.
நேற்று காலை, 11:00 மணிக்கு இந்த பகுதிக்கு பொதுமக்கள் உடலை எடுத்து வந்த போது, மீண்டும் எஸ்டேட் நிர்வாகத்தினர் அங்கு புதைக்க எதிர்ப்பு தெரிவித்து தடுத்தனர்.
இதனால், உடலை சாலையில் வைத்து பழங்குடியின மக்கள் போராட்டத்தில் இறங்கினர். தகவலின் பேரில், வருவாய்த் துறையினர், கொலக்கம்பை போலீசார் அங்கு சென்று பேச்சு வார்த்தை நடத்தினர். எனினும், தீர்வு கிடைக்காததால் மதியம், 1:00 வரை போராட்டம் நீடித்தது.
தொடர்ந்து ஊர் தலைவர் தேவியம்மா தலைமையில், உடலை புதைக்காமல், சாலையில் விட்டு செல்வதாக பழங்குடியினர் தெரிவித்தனர். இதன்பிறகு, அதே இடத்தில் புதைக்க அனுமதி வழங்கப்பட்டு, உடல் புதைக்கப்பட்டது.
நீலகிரி மாவட்ட பழங்குடியினர் கூட்டமைப்பு தலைவர் மணி கூறுகையில்,''ஊஞ்சலறை கிராமத்தில், அரசின் இடத்தில் கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு இறந்தவர்களின் உடல்கள் புதைக்கப்பட்டன. ஆனால் தற்போது, இந்த இடத்துக்கு எஸ்டேட் நிர்வாகத்தினர் சொந்தம் கொண்டாடி வருகின்றனர். இந்த பிரச்னைக்கு பின்பு, கிராம சபை கூட்டத்தில், இடத்தை முழு அளவீடு செய்து, அதனை அரசின் இடம் என்று அறிவித்த பிறகு குறிப்பிட்ட சுடுகாட்டில் புதைக்க தொடர்ந்து அனுமதிக்க வேண்டும் எனவும் கேட்டுக் கொள்ளப்பட்டது,'' என்றார்.

