/
உள்ளூர் செய்திகள்
/
நீலகிரி
/
ஓய்வூதியம் பெற படாதபாடு காத்திருக்கும் பழங்குடிகள்
/
ஓய்வூதியம் பெற படாதபாடு காத்திருக்கும் பழங்குடிகள்
ஓய்வூதியம் பெற படாதபாடு காத்திருக்கும் பழங்குடிகள்
ஓய்வூதியம் பெற படாதபாடு காத்திருக்கும் பழங்குடிகள்
ADDED : ஏப் 14, 2025 06:49 AM

பந்தலுார் : ஓய்வூதியம் பெரும் பயனாளிகள், வங்கிகளுக்கு சென்று கால் கடுக்க காத்திருந்து ஓய்வூதியம் பெறும் அவலம் தொடர்கிறது.
முதியோர், மாற்றுத்திறனாளிகள், முதிர் கன்னிகள் ஆகியோருக்கு, வருவாய்த்துறை மூலம் ஓய்வூதியம் மற்றும் உதவித்தொகை வழங்கப்பட்டு வருகிறது.
இந்த உதவித்தொகைகள் அந்தந்த பகுதி அஞ்சல் நிலையங்கள் மூலம் வழங்கப்பட்டு வந்த நிலையில், பின்னர் அந்தந்த பகுதி வங்கிகளிடம் ஒப் படைக்கப்பட்டது.
வங்கிகளில் கணக்கு வைத்துள்ள ஓய்வூதியம் மற்றும் உதவித்தொகை பெரும் பயனாளிகளுக்கு, வருவாய் துறை மூலம் வங்கிகளுக்கு தொகை வழங்கப்பட்டு, வங்கியில் ஒரு பணியாளர் நேரடியாக ஒவ்வொரு பகுதிக்கும் சென்று இந்த தொகையினை வழங்கி வந்தார்.
இதற்காக ஒவ்வொரு பயனாளிக்கும் தல, 30 ரூபாய் வீதம் அரசு மூலம் வங்கிக்கு கமிஷன் வழங்கப்பட்டு வந்தது. இந்த கமிஷன் கடந்த ஆறு மாதங்களாக நிறுத்தப்பட்ட நிலையில், வங்கி நிர்வாகம் உதவித்தொகை மற்றும் ஓய்வூதியம் நேரடியாக சென்று வழங்க மறுத்து விட்டது.
இதனால், தற்போது பயனாளிகள், வங்கிகளுக்கு சென்று மணி கணக்கில் காத்திருந்து ஓய்வூதியம் மற்றும் உதவி தொகையினை பெற்று வரவேண்டிய சூழல் தொடர்கிறது.
மா.கம்யூ., மாவட்ட குழு உறுப்பினர் ரவிக்குமார், முதல்வருக்கு அனுப்பியுள்ள மனுவில், 'தேயிலை தோட்ட தொழிலாளர்கள் மற்றும் பழங்குடியின மக்கள் அதிகம் வாழும் பந்தலுார் மற்றும் இதன் சுற்றுவட்டார பகுதி, பயனாளிகள் பயன்பெறும் வகையில் ஏற்கனவே இருந்தது போல், வங்கிகள் மூலம் நேரடியாக குறிப்பிட்ட பகுதிகளுக்குச் சென்று உதவித்தொகை வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இதே நிலை தொடர்ந்தால் கட்சி ஆலோசனைப்படி, தாசில்தார் அலுவலகம் முன் தொடர் போராட்டம் நடத்தப்படும்,' என, கூறப்பட்டுள்ளது.

