ADDED : ஆக 30, 2026 06:31 PM
அ நிறம் | அளவு
குன்னூர்: நேபாள வெள்ளத்தில் உயிரிழந்தோருக்கு, ஹிந்து முன்னணி சார்பில், குன்னூரில் மோட்ச தீபம் ஏற்றி அஞ்சலி செலுத்தப்பட்டது.
நேபாளத்தில் ஏற்பட்ட பெருவெள்ளத்தில் சிக்கி உயிரிழந்தவர்களின் ஆத்மா சாந்தியடைய வேண்டி, ஹிந்து முன்னணி அமைப்பு சார்பில் குன்னூர் அண்ணா சிலை அருகே அஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சி நடந்தது. இந்நிகழ்வின் போது, உயிரிழந்தவர்களின் நினைவாக மோட்ச தீபம் ஏற்றப்பட்டு மலர் அஞ்சலியும், இரண்டு நிமிட மவுன அஞ்சலியும் செலுத்தப்பட்டது. ஹிந்து முன்னணி மாவட்ட செயலாளர்கள் சீனிவாசன், ஹரிகரன் மற்றும் மாவட்ட, நகர, ஒன்றியப் பொறுப்பாளர்கள் பங்கேற்று அஞ்சலி செலுத்தினர்
