/
உள்ளூர் செய்திகள்
/
நீலகிரி
/
ராணி அஹில்யாபாய் ஓல்கரின் 300வது பிறந்த நாளில் மரியாதை
/
ராணி அஹில்யாபாய் ஓல்கரின் 300வது பிறந்த நாளில் மரியாதை
ராணி அஹில்யாபாய் ஓல்கரின் 300வது பிறந்த நாளில் மரியாதை
ராணி அஹில்யாபாய் ஓல்கரின் 300வது பிறந்த நாளில் மரியாதை
ADDED : ஜூன் 03, 2025 11:24 PM

கோத்தகிரி,; கோத்தகிரியில் பா.ஜ., சார்பில், ராணி அஹில்யாபாய் ஓல்கரின், 300வது பிறந்த நாள் விழா நடந்தது.
மகாராணி அஹில்யாபாய் ஓல்கர் மராட்டிய பேரரசின் இந்துார் அரசை ஆட்சி செய்தவர். ஓல்கர் வம்சத்தின் ராணியான இவர், அகமத் நகர் சோண்டியில், 1725 மே, 31ம் தேதி பிறந்தார்.
இவர் தனது ஆட்சி காலத்தின் போது, பல பகுதிகளில், கோவில்கள் எழுப்பி, குளங்களையும் கட்டியுள்ளார். மனித குலம் உட்பட, அனைத்து ஜீவராசிகள் மீது மிகுந்த பற்று கொண்டவராக இருந்துள்ளார்.
சமூக சீர்திருத்தவாதியான இவரது, 300வது பிறந்தநாள் விழா, கோத்தகிரியில், பா.ஜ., சார்பில் கொண்டாடப்பட்டது. பா.ஜ., மாவட்ட தலைவர் தருமன் தலைமை வகித்தார். மாநில செயற்குழு உறுப்பினர் போஜராஜன், முன்னாள் தலைவர் குமரன், பொது செயலாளர்கள் குமார், பாபு, மாநில பட்டியல் அணி செயலாளர் அன்பு ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
மாநில பொது செயலாளர் கார்த்தியாயினி சிறப்பு விருந்தினராக பங்கேற்று, அஹில்யாபாய் ஓல்கர் படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தி, அவரது வாழ்க்கை வரலாறு மற்றும் சமூக சீர்திருத்தம் குறித்து பேசினார்.
கட்சி நிர்வாகிகள் மற்றும் உறுப்பினர்கள் பலர் பங்கேற்றனர்.