/
உள்ளூர் செய்திகள்
/
நீலகிரி
/
உயிரிழந்தவர்களுக்கு அருவங்காட்டில் புஷ்பாஞ்சலி
/
உயிரிழந்தவர்களுக்கு அருவங்காட்டில் புஷ்பாஞ்சலி
ADDED : ஏப் 27, 2025 09:25 PM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
குன்னுார்: காஷ்மீர், பஹல்காமில் பயங்கரவாத தாக்குதலில் உயிரிழந்தவர்களுக்கு அருவங்காட்டில் பா.ஜ., சார்பில் புஷ்பாஞ்சலி நடந்தது.
காஷ்மீர், பஹல்காமில் பயங்கரவாத தாக்குதலில், 28 பேர் உயிரிழந்தனர். இவர்களின் ஆத்மா சாந்தியடைய பல்வேறு இடங்களிலும் அஞ்சலி செலுத்தப்பட்டு வருகிறது. அருவங்காடு பகுதியில், பா.ஜ., வடக்கு மண்டலம் சார்பில், புஷ்பாஞ்சலி செலுத்தப்பட்டது. மண்டல் தலைவர் சுர்ஜித் குமார் தலைமையில், பா.ஜ., நிர்வாகிகள், உறுப்பினர்கள், பொதுமக்கள், பள்ளி மாணவ, மாணவியர் அஞ்சலி செலுத்தினர்.