/
உள்ளூர் செய்திகள்
/
நீலகிரி
/
குண்டு வெடிப்பில் பலியானோருக்கு அஞ்சலி
/
குண்டு வெடிப்பில் பலியானோருக்கு அஞ்சலி
ADDED : பிப் 15, 2024 12:05 AM

மேட்டுப்பாளையம், - கோவை மாவட்டத்தில் கடந்த 1998 ம் ஆண்டு நடந்த குண்டு வெடிப்பில் மேட்டுப்பாளையத்தை சேர்ந்த 7 பேர் உயிரிழந்தனர்.
குண்டு வெடிப்பில் பலியானோருக்கு ஒவ்வொரு ஆண்டும் நினைவஞ்சலி செலுத்தப்பட்டு வருகிறது. அதன் படி மேட்டுப்பாளையம் பஸ் ஸ்டாண்டில் 26 ம் ஆண்டு நினைவஞ்சலி நேற்று மேட்டுப்பாளையம் நகர பா.ஜ., சார்பில் செலுத்தப்பட்டது. இந்நிகழ்வுக்கு நகர தலைவர் உமா சங்கர் தலைமை வகித்தார். கோவை வடக்கு மாவட்ட தலைவர் சங்கீதா, மாநில செயற்குழு உறுப்பினர் சதீஷ்குமார், மாநில பொதுக்குழு உறுப்பினர் கிருஷ்ணசாமி, உள்ளிட்ட பா.ஜ., நிர்வாகிகள் உட்பட பலர் கலந்து கொண்டு குண்டு வெடிப்பில் பலியான 7 பேரின் உருவப்படத்திற்கு மாலை அணிவித்து மலர் தூவி அஞ்சலி செலுத்தினர்.--

