/
உள்ளூர் செய்திகள்
/
நீலகிரி
/
அரசு நடுநிலை பள்ளியில் முப்பெரும் விழா
/
அரசு நடுநிலை பள்ளியில் முப்பெரும் விழா
ADDED : மார் 26, 2025 08:54 PM
கோத்தகிரி; 'கோத்தகிரி ஒரசோலை அரசு நடுநிலை பள்ளியில், 78வது பள்ளி ஆண்டு விழா, விளையாட்டு விழா மற்றும் ஓய்வு பெற்ற ஆசிரியர்களுக்கு பாராட்டு விழா,' என, முப்பெரும் விழா நடந்தது.
பள்ளி தலைமை ஆசிரியர் நஞ்சுண்டன் வரவேற்றார். ஆசிரியை கமலா ஆண்டறிக்கை வாசித்தார். வட்டார கல்வி அலுவலர் சுப்ரமணி தலைமை வகித்தார். கோத்தகிரி ஜூடிசியல் மாஜிஸ்திரேட், முன்னாள் எம்.எல்.ஏ., சாந்தி ராமு ஆகியோர், சிறப்பு விருந்தினர்களாக பங்கேற்றனர்.
அறிவுத்திறன், கலைநிகழ்ச்சி மற்றும் விளையாட்டு போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு, பரிசு மற்றும் சான்றிதழ் வழங்கப்பட்டது. ஓய்வு பெற்ற ஆசிரியர்களுக்கு, பாராட்டு தெரிவிக்கப்பட்டது. மாணவர்களின் கலை நிகழ்ச்சி நடந்தது.