/
உள்ளூர் செய்திகள்
/
நீலகிரி
/
கர்நாடகாவில் லாரிகள் வேலை நிறுத்தம் காய்கறி விலை உயர வாய்ப்பு
/
கர்நாடகாவில் லாரிகள் வேலை நிறுத்தம் காய்கறி விலை உயர வாய்ப்பு
கர்நாடகாவில் லாரிகள் வேலை நிறுத்தம் காய்கறி விலை உயர வாய்ப்பு
கர்நாடகாவில் லாரிகள் வேலை நிறுத்தம் காய்கறி விலை உயர வாய்ப்பு
ADDED : ஏப் 15, 2025 09:18 PM

கூடலுார் ;கர்நாடகாவில் லாரிகள் வேலை நிறுத்தம் காரணமாக, கூடலுார், கேரளாவில் காய்கறிகள் விலை உயரும் சூழல் ஏற்பட்டுள்ளது.
கர்நாடக மாநிலத்தில் டீசல் விலை உயர்வு, டோல் கட்டண உயர்வை எதிர்த்து, கர்நாடகா லாரி ஓட்டுனர்கள் சங்கம் சார்பில் நேற்று, முதல் வேலை நிறுத்த போராட்டம் நடக்கிறது, இதனால், கர்நாடகாவில் பெரும்பாலான லாரிகள் ஓடவில்லை. அதே போன்று வெளிமாநில லாரிகளும் கர்நாடகாவுக்கு செல்லவில்லை. கூடலுாரில் இருந்து கர்நாடகாவுக்கு, செல்லும் லாரிகள் சாலை ஓரங்களில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. இதனால், கர்நாடகாவில் இருந்து நீலகிரி மற்றும் கேரளாவுக்கு காய்கறிகள் வருவது தடைபட்டுள்ளது. காய்கறி விலைகள் உயரும் சூழல் ஏற்பட்டுள்ளது.வியாபாரிகள் கூறுகையில், 'கர்நாடகாவில் இருந்து கூடலுார் வழியாக நீலகிரி மற்றும் கேரளாவுக்கு அதிக அளவில் காய்கறிகள் விற்பனைக்கு வருகின்றது. தற்போது கர்நாடகாவில் லாரி ஸ்டிரைக் நடப்பதால், காய்கறி வரத்து குறைந்து விலை உயரும் வாய்ப்புள்ளது,' என்றனர்.