தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/நீலகிரி/ ஊட்டியில் வாலிபரின் கழுத்தை அறுத்த இருவர் கைது

 ஊட்டியில் வாலிபரின் கழுத்தை அறுத்த இருவர் கைது

 ஊட்டியில் வாலிபரின் கழுத்தை அறுத்த இருவர் கைது


ADDED : மார் 25, 2026 08:21 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : மார் 25, 2026 08:21 PM


Follow on Google
அ நிறம் | அளவு

ஊட்டி: ஊட்டியில் வாலிபரின் கழுத்தை அறுத்த இருவரை போலீசார் கைது செய்தனர்.

ஊட்டி அழகர் மலையை சேர்ந்த பிரதாப், 34, கேரட் முட்டை துாக்கும் வேலை செய்து வருகிறார். கடந்த சில நாட்களுக்கு முன்பு மனைவி இறந்ததால், மன வருத்தத்தில் இருந்தார். இந்த சம்பவத்துக்கு தலைகுந்தா பகுதியை சேர்ந்த மணிகண்டன் காரணமாக இருந்ததாக கூறி, இருவருக்கு இடையே தகராறு ஏற்பட்டுள்ளது.

இந்நிலையில், நேற்று முன்தினம் பிரதாப் மற்றும் அவரின் சகோதரர் ரஞ்சித்குமார், 32, ஆகிய இருவரும் டாஸ்மாக் மதுக்கடைக்கு வந்துள்ளனர். அப்போது, கடையில் இருந்து வெளியில் வந்த மணிகண்டனை பார்த்த பிரதாப், அவருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார்.

வாக்குவாதம் முற்றிய நிலையில், சகோதரர்கள் இருவரும் சேர்ந்து மணிகண்டனை தாக்கியுள்ளனர். ஒரு கட்டத்தில் ஆத்திரமடைந்த பிரதாப், தான் வைத்திருந்த பேனா கத்தியால் மணிகண்டனின் கழுத்தை அறுத்துள்ளார்.

இந்த தகவலின் படி, ஊட்டி மத்திய போலீஸ் இன்ஸ்பெக்டர் அன்பரசு தலைமையில், சப்--இன்ஸ்பெக்டர் நாகராஜ் உள்ளிட்ட போலீசார், சம்பவ இடத்திற்கு சென்று, மணிகண்டனை மீட்டு, அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்ததுடன், பிரதாப், ரஞ்சித்குமார் ஆகியோரை கைது செய்தனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us