ADDED : பிப் 03, 2026 05:45 AM
அ நிறம் | அளவு
பந்தலுார்: பந்தலுார் அருகே அய்யன்கொல்லி பஜார் பகுதியில், வெளிமார்க்கெட்டில் சரக்கு விற்பனை செய்த இருவர் கைது செய்யப்பட்டனர்.
வள்ளலார் தினத்தில் டாஸ்மாக் மது கடைகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டு இருந்தது. இந்நிலையில், அய்யன்கொல்லி பஜார் பகுதியில், கடைகளுக்கு பின்புறம் இரண்டு பேர், கூடுதல் விலைக்கு சரக்கு விற்பனை செய்து வருவதாக, சேரம்பாடி போலீஸ் இன்ஸ்பெக்டர் சந்திரசீலனுக்கு தகவல் கிடைத்தது.
அப்பகுதியில் ஆய்வு செய்த போலீசார், 8 சரக்கு பாட்டில்களை பறிமுதல் செய்து, பாண்டிச்சேரி பகுதியை சேர்ந்த பீட்டர், 38 என்பவரை கைது செய்தனர்.
அதே பகுதியில், 79 குவாட்டர் பாட்டில்களை பறிமுதல் செய்த போலீசார், அத்திச்சால் பகுதியை சேர்ந்த அனீஸ், 39, என்பவரை கைது செய்தனர்.
