போலி டாக்குமென்ட் தயாரித்து மோசடி குன்னுாரில் இருவர் கைது
போலி டாக்குமென்ட் தயாரித்து மோசடி குன்னுாரில் இருவர் கைது
ADDED : ஜன 19, 2026 05:44 AM
குன்னூர்: குன்னூரில் போலி டாக்குமென்ட் தயாரித்து, விற்பனை செய்ய, 32 லட்சம் ரூபாய் பெற்றதுடன், வங்கியில் கடன் பெற்றது தொடர்பாக இருவர் கைது செய்யப்பட்டனர்.
நீலகிரி மாவட்டம், குன்னூர் உபதலை காந்திநகர் பகுதியை சேர்ந்தவர் சிவகுமார், 43.
இவரின் தாயார் பேரனுக்கு எழுதி வைத்த வீட்டின் உயிலை வைத்து தனது பெயரில், குன்னூர் பஜார் தெருவை சேர்ந்த இசக்கி முத்து 53, என்பவரால், சிவக்குமார் போலி டாகுமென்ட் தயார் செய்துள்ளார்.
இதனை வைத்து பெஷல் மார்ட்டின் என்பவரிடம் விற்பனைக்கான ஒப்பந்தமிட்டு, 32 லட்சம் ரூபாய் பெற்றுள்ளார்.
இது மட்டுமின்றி குன்னூர் ரெப்கோ வங்கியிலும் வைத்து கடன் பெற்றுள்ளார். இது தொடர்பாக அருவங்காடு போலீசில் பெஷல் மார்ட்டின் புகார் கொடுத்தார்.
புகாரின் பேரில் இன்ஸ்பெக்டர் செல்லமணி, சப் இன்ஸ்பெக்டர் முரளி தலைமையில் விசாரணை நடத்தினர்.
விசாரணையை தொடர்ந்து, போலி டாக்குமென்ட் தயாரித்து மோசடியில் ஈடுபட்ட சிவக்குமார் மற்றும் இசக்கி முத்து ஆகியோரை நேற்று முன்தினம் கைது செய்து குன்னூர் கிளை சிறையில் அடைத்தனர்.
