/
உள்ளூர் செய்திகள்
/
நீலகிரி
/
போதை மாத்திரையுடன் இரண்டு பேர் கைது
/
போதை மாத்திரையுடன் இரண்டு பேர் கைது
ADDED : செப் 01, 2025 10:10 PM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
பாலக்காடு; கேரள மாநில பாலக்காடு மாவட்டம் நாட்டுகல் எஸ்.ஐ., ஸ்ரீஜித்தின் தலைமையிலான போலீஸ் படையினர், எடத்தநாட்டுக்கரை வட்டமண்ணப்புரம் பகுதியில், வாகன சோதனை நடத்தி வந்தனர்.
அப்போது, சந்தேகிக்கும் வகையில் பார்த்த இருவரிடம் நடத்திய சோதனையில், 52 ஆயிரம் ரூபாய் மதிப்புடைய, 13.06 கிராம் எம்.டி.எம்.ஏ., என்ற போதை மாத்திரை மறைத்து வைத்திருப்பதை கண்டுபிடித்தனர்.
தொடர் விசாரணையில் அவர்கள், வட்டமண்ணப்புரம் பகுதியைச் சேர்ந்த முகமது ஷமீர் 27, மலப்புரம் மாவட்டம் மேலாற்றூர் பகுதியைச் சேர்ந்த முகமது ராஷித் 27, ஆகியோர் என்பது தெரிந்தது.
கைது செய்த இருவரையும், நீதிமன்றத்தில் ஆஜர் செய்து சிறையில் அடைத்தனர்.