ADDED : ஜூன் 29, 2026 10:19 PM

அ நிறம் | அளவு
பாலக்காடு: பாலக்காடு அருகே, போதை மாத்திரையுடன் பெண் உட்பட இருவரை, போலீசார் கைது செய்தனர்.
கேரள மாநிலம் பாலக்காடு மாவட்டம், சொரனூர் போலீசாருக்கு கிடைத்த ரகசிய தகவலின் அடிப் படையில், இன்ஸ்பெக்டர் ரவிகுமார் தலைமையிலான போலீஸ் படையினர், சொரனூர் எஸ்.எம்.பி., சந்திப்பு அருகே உள்ள தனியார் லாட்ஜில் சோதனை நடத்தினர்.
அப்போது அறையில் தங்கியிருந்த, பட்டாம்பி குண்டூர்க்கரை பகு தியைச் சேர்ந்த முகமது ஆஷிக், 26, பாலக்காடு காவில்பாடு பகுதியை சேர்ந்த ஷாஜிரா,31, ஆகியோரின் பைகளை சோதனையிட்ட போது, 68 ஆயிரம் ரூபாய் மதிப்புள்ள, 17 கிராம் அளவு கொண்ட எம்.டி.எம்.ஏ., என்ற போதை மாத்திரை மறைத்து வைத்திருப்பது கண்டுபிடித்தனர். இதையடுத்து, கைது செய்த இருவரையும் போலீசார் நீதிமன்றத்தில் ஆஜர் செய்து சிறையில் அடைத்தனர்.
