/
உள்ளூர் செய்திகள்
/
நீலகிரி
/
கிணற்றில் விழுந்து தத்தளித்த, இரண்டு கரடிகள் மீட்பு
/
கிணற்றில் விழுந்து தத்தளித்த, இரண்டு கரடிகள் மீட்பு
கிணற்றில் விழுந்து தத்தளித்த, இரண்டு கரடிகள் மீட்பு
கிணற்றில் விழுந்து தத்தளித்த, இரண்டு கரடிகள் மீட்பு
ADDED : ஜன 18, 2025 11:16 PM

கோத்தகிரி:கோத்தகிரி அருகே, கிணற்றில் விழுந்து தத்தளித்த, இரண்டு கரடிகளை வனத்துறையினர் பத்திரமாக மீட்டனர்.
கோத்தகிரி வனச்சரகம், ஜக்கனாரை ஊராட்சிக்கு உட்பட்ட அரவேனு பகுதியில், ஊராட்சிக்கு சொந்தமான கிணறு உள்ளது. காங்ரீட்டால் மூடப்பட்ட கிணற்றின் ஓரத்தில், சிறிய வழியாக, நேற்று காலை, இரண்டு கரடிகள் விழுந்து, வெளியே வர முடியாமல் தத்தளித்துள்ள.
இதனை பார்த்த பகுதி மக்கள் வனத்துறைக்கு தகவல் தெரிவித்தனர். அதன்படி, ரேஞ்சர் செல்வராஜ் தலைமையிலான வனத்துறையினர் கிணற்றை ஆய்வு செய்து, கரடிகள் தத்தளிப்பதை உறுதி செய்தனர்.
பிறகு, இரண்டு ஏணிகள் கொண்டுவரப்பட்டு, ஏணி வழியாக கரடிகளை மேலே கொண்டுவந்து வனத்துறையினர் மீட்டனர். பிறகு, கரடிகள் தேயிலை தோட்டம் வழியாக, வனப்பகுதிக்கு விரட்டப்பட்டன.