/
உள்ளூர் செய்திகள்
/
நீலகிரி
/
நீலகிரி தொகுதியில் 16 வேட்பாளர்கள் போட்டியிடுவதால் இரண்டு மின்னணு இயந்திரங்கள்!
/
நீலகிரி தொகுதியில் 16 வேட்பாளர்கள் போட்டியிடுவதால் இரண்டு மின்னணு இயந்திரங்கள்!
நீலகிரி தொகுதியில் 16 வேட்பாளர்கள் போட்டியிடுவதால் இரண்டு மின்னணு இயந்திரங்கள்!
நீலகிரி தொகுதியில் 16 வேட்பாளர்கள் போட்டியிடுவதால் இரண்டு மின்னணு இயந்திரங்கள்!
ADDED : ஏப் 03, 2024 10:19 PM
ஊட்டி : நீலகிரி லோக்சபாதொகுதியில், 16 வேட்பாளர்கள் போட்டியிடுவதால், இரண்டு மின்னணு இயந்திரங்கள் பயன்படுத்தப்படுகிறது;வாக்காளர்கள் குழப்பமடையாமல் ஓட்டளிக்க அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
தமிழகத்தில் ஒரே கட்டமாக ஏப்., 19ம் தேதி லோக்சபா தேர்தல் நடக்கிறது. இதற்கான ஏற்பாடுகளை தேர்தல் கமிஷன் உத்தரவுப்படி, அந்தந்த மாவட்ட தேர்தல் அதிகாரிகள் மேற்கொண்டு வருகின்றனர்.
வாக்காளர்கள் விபரம்
நீலகிரியில் உள்ள ஊட்டி, குன்னுார், கூடலுார் ஆகிய மூன்று தொகுதிகளில், 'ஊட்டி தொகுதியில், 92 ஆயிரத்து 813 ஆண்; 1 லட்சத்து ஆயிரத்தி 431 பெண், 12 மூன்றாம் பாலினத்தவர்,' என, மொத்தம், 1 லட்சத்து 94 ஆயிரத்து 256 வாக்காளர்கள் இடம் பெற்றுள்ளனர்.
கூடலுார் தொகுதியில், '92 ஆயிரத்து 892 ஆண், 98 ஆயிரத்து 718 பெண், 4 மூன்றாம் பாலினத்தவர்,' என, மொத்தம், 1 லட்சத்து 91 ஆயிரத்து 614 வாக்காளர்கள் இடம் பெற்றுள்ளனர்.
குன்னுார் தொகுதியில், '88 ஆயிரத்து 792 ஆண், 98 ஆயிரத்து 958 பெண், 4 மூன்றாம் பாலினத்தவர்,' என, 1 லட்சத்து 87 ஆயிரத்து 754 வாக்காளர்கள் இடம் பெற்றுள்ளனர்.
மேட்டுப்பாளையம் தொகுதியில், '1 லட்சத்து 45 ஆயிரத்து 547 ஆண், 1 லட்சத்து 56 ஆயிரத்து 833 பெண், 46 மூன்றாம் பாலினத்தவர்கள்,' என, 3 லட்சத்து 2 ஆயிரத்து 426 வாக்காளர்கள் இடம் பெற்றுள்ளனர்.
அவிநாசி தொகுதியில், '1 லட்சத்து 37 ஆயிரத்து 331 ஆண், 1 லட்சத்து 46 ஆயிரத்து 431 பெண், 9 மூன்றாம் பாலினத்தவர்,' என, 2 லட்சத்து 83 ஆயிரத்து 771 வாக்காளர்கள் இடம் பெற்றுள்ளனர்.
பவானி சாகர் தொகுதியில், '1 லட்சத்து 25 ஆயிரத்து 646 ஆண், 1 லட்சத்து 33 ஆயிரத்து 426 பெண், 22 மூன்றாம் பாலினத்தவர்,' என, 2லட்சத்து 59ஆயிரத்து 94 வாக்காளர்கள் இடம் பெற்றுள்ளனர்.
நீலகிரி லோக்சபாவில், 1600க்கும் மேற்பட்ட ஓட்டு சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளது.
ஏற்கனவே மின்னணு ஓட்டுப்பதிவு இயந்திரங்கள் சுழற்சி முறையில் ஒதுக்கீடு செய்யப்பட்டு அந்தந்த தொகுதிகளுக்கு அனுப்பப்பட்டு போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. நீலகிரி லோக்சபாவுக்கு உட்பட்ட, 6 தொகுதிகளில், 7 ஆயிரத்திற்கு மேற்பட்டவர்களுக்கு தேர்தல் பணி ஒதுக்கப்பட்டுள்ளது.
இரண்டு மின்னணு இயந்திரங்கள்
'நீலகிரி லோக்சபாவில் ஆங்கீகரிக்கப்பட்ட தேசிய மற்றும் மாநில அரசியல் கட்சிகளை சேர்ந்த வேட்பாளர்கள் மற்றும் சுயேட்சை வேட்பாளர்கள்,' என, மொத்தம், 16 வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர்.
ஒரு மின்னணு ஓட்டுப்பதிவு இயந்திரத்தில், 16 பட்டன்கள் உள்ளன. கடைசியில் உள்ள ஒரு பட்டன் நோட்டாவுக்கு ஒதுக்கப்படுகிறது. வேட்பாளர்கள் எண்ணிக்கை அதிகமானதால் இம்முறை இரண்டு மின்னணு ஓட்டுப்பதிவு இயந்திரங்கள் பயன்படுத்தப்படுகிறது.
அதில், வேட்பாளர்கள் பெயர், சின்னங்களுக்கு பின், 17வது பட்டன் நோட்டோவுக்கு ஒதுக்கப்படுகிறது. அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சி வேட்பாளர்களின் பெயர்கள், சின்னங்களுடன் கூடிய 'பேலட் ஷீட்' பிறகு ஒட்டப்படுகிறது.
இரண்டு மின்னணு இயந்திரங்கள் பயன்படுத்தப்படுவதால், நேற்று அந்தந்த தொகுதிகளுக்கு கூடுதல் மின்னணு இயந்திரங்கள் அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சி பிரமுகர்கள், தேர்தல் அதிகாரிகள் தலைமையில் அனுப்பி வைக்கப்பட்டது.
'இரண்டு மின்னணு இயந்திர பயன்பாட்டால் வாக்காளர்கள் குழப்பமடையாமல் கவனமுடன் ஓட்டளிக்க வேண்டும்,' என, தேர்தல் அதிகாரிகள் அறிவுறுத்தி உள்ளனர்.

